மனசுல பட்டதை நேரடியாக சொல்லுறவங்களை நம்பலாம். ஆனா...: ரஜினிகாந்த் பேச்சு

சென்னை
கூலி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது.
இதில் பேசிய ரஜினி, லோகேஷ் கனகராஜ் தான் கூலி படத்தின் உண்மையான ஹீரோ என்றார்.
சென்னை:
கூலி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. அதில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:
லோகேஷ் கனகராஜ் தான் கூலி படத்தின் உண்மையான ஹீரோ.
ஒரிஜினால் ஆக நான் வில்லன்மா. எத்தனை நாள் தான் நான் நல்லவனாக நடிப்பது? வெங்கட் பிரபு அஜித்துக்கு எழுதிய டயலாக் போலவே, நாகார்ஜுனா கேரக்டர் பண்ணி இருக்காரு.
எனக்கும் சத்யராஜுக்கும் கருத்து முரண்பாடு இருக்கலாம். ஆனா அவர் மனசுல பட்டதை சொல்லிட்டு போயிருவாரு. மனசுல பட்டதை நேரடியாக சொல்லுறவங்களை நம்பலாம். ஆனா மனசுல் வச்சுக்கிட்டு வெளியில் எதுவும் காட்டாதவங்களை நம்ப முடியாது.
நான் 1950 மாடல், லட்சம் கிலோமீட்டர் ஓடி இருக்கிறேன்.பார்ட் எல்லாம் உடலில் மாற்றி இருக்கிறார்கள். எனவே, என்னை பார்த்து ஆட வையுங்கள் என டான்ஸ் மாஸ்டரிடம் கூறினேன்.
இந்தப் படம் ரசிகர்களுக்கு கண்டிப்பாக புதிய அனுபவமாக இருக்கும் என தெரிவித்தார்.