அம்மாவாக விரும்பினேன்! ஆனால், திருமணத்திற்கு மறுத்தது இதனால் தான்! வெளிப்படையாக பேசிய ஸ்ருதிஹாசன்

அம்மாவாக விரும்பினேன்! ஆனால், திருமணத்திற்கு மறுத்தது இதனால் தான்! வெளிப்படையாக பேசிய ஸ்ருதிஹாசன்
அம்மாவாக விரும்பினேன்! ஆனால், திருமணத்திற்கு மறுத்தது இதனால் தான்

சென்னை: நடிகர் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். தமிழை விடவும் மற்ற மொழிகளில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் ஸ்ருதிஹாசன் சமீபத்தில் தன்னுடைய திருமண வாழ்க்கை மற்றும் எதிர்கால குழந்தை பற்றி பேசி இருக்கிறார்.

பல பிரபலங்களின் குழந்தைகள் சினிமாவில் அறிமுகம் ஆகி இருக்கிறார்கள் ஆனால் அதில் ஒரு சிலரால் மட்டும் தான் தொடர்ந்து சினிமாவில் ஜெயிக்க முடிகிறது. ஒரு சிலருக்கு என்னதான் திறமையும், உழைப்பும் இருந்தாலும் அவர்களுக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் இருக்கிறது. நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி தமிழ் சினிமாவில் கெத்தான கேரக்டருக்கு பொருத்தமாக இருந்தாலும் அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை

ஒரு சில திரைப்படங்களிலும் சின்ன சின்ன வருடங்கள் தான் வரலட்சுமிக்கு கிடைத்துக் கொண்டிருக்கிறது. அதேபோலத்தான் நடிகர் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசனுக்கும் இருக்கிறது. ஸ்ருதிஹாசன் ஏழாம் அறிவு திரைப்படத்தில் நடித்த போது அவருக்கு அதிகமான வரவேற்பும் சப்போட்டும் கிடைத்தது ஆனால் அதற்கு பிறகு அவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அது பெரிய அளவில் அவருக்கு வெற்றியை

அதேபோல பர்சனல் வாழ்க்கையிலும் ஸ்ருதிஹாசன் இதற்கு முன்பு பலமுறை காதல் தோல்விகளை சந்தித்திருக்கிறார். திருமணம் செய்ய இறுதி கட்டத்திற்கு சென்றாலும் காதல் தோல்வியில் முடிந்திருக்கிறது. ஆனால் அந்த காதல் தோல்விகளுக்கு நான் காரணம் அல்ல என்று ஸ்ருதிஹாசன் கூறியிருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் பார்ட்காஸ்ட்ரான யூடியூபர் ரன்வீர் அலாபாடியுடன் நடிகை ஸ்ருதிஹாசன் பாட் காஸ்டில் பேசி இருக்கிறார்.

அதில், திருமண பற்றி பேசும்போது "திருமணம் என்ற எண்ணத்தால் நான் பயந்து போயிருக்கிறேன். தன்னுடைய அடையாளத்தை ஒரு சின்ன காகிதத்துடன் இணைக்க கூடாது என்று நினைக்கிறேன். திருமணம் சொல்லும் கொள்கைகளை நான் மதிக்கிறேன். ஆனால் அவற்றை சட்ட ஆவணமாக்கும் போது அது எனக்கு வேண்டாம் என்று நினைக்கிறேன். ஒரு காலத்தில் திருமணம் செய்ய இருந்த நான் அந்த உறவின் புரிதல் மற்றும் இணக்கம் இல்லாத காரணத்தால் அது முடிவுக்கு வந்தது.

திருமணம் என்பது இரண்டு நபர்களை மட்டும் சார்ந்தது அல்ல. அது குழந்தைகள் எதிர்காலம், வாழ்நாள் பொறுப்பையும் பற்றியது என்று ஸ்ருதிஹாசன் பேசியிருக்கிறார். அதோடு அவர் மேலும் பேசும்போது நான் எப்போதும் ஒரு தாயாக இருக்க விரும்புகிறேன். ஆனால் பிறக்கும் குழந்தையை சிங்கிள் பேரண்டாக வளர்க்க விரும்பவில்லை. அதாவது தற்போதைய சூழ்நிலையில் ஒரு குழந்தையை வளர்க்க வேண்டும் என்றால் இரண்டு பெற்றோர்கள் தேவைப்படுகிறார்கள் என்பதை சூசகமாக சொல்லி இருக்கிறார். அதோடு எதிர்காலத்தில் ஒரு குழந்தையை தத்தெடுப்பது விருப்பமாக இருக்கலாம் என்று அந்த பேட்டியில் ஸ்ருதிஹாசன் பேசியிருக்கிறார்.