மாரி செல்வராஜின் 'பைசன்' பிஸினஸ் எப்படி?

வாழை' படத்தை அடுத்து மாரி செல்வராஜ் தற்போது இயக்கி உள்ள படம் 'பைசன் காளமாடன்'. கபடி விளையாட்டை மையமாக கொண்ட கதையில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் துருவ் விக்ரம் நாயகனாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள இந்த படத்தை நீலம் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ளது. தீபாவளிக்கு திரைக்கு வரும் இந்த படத்தின் இறுதி கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்த பைசன் படத்தின் தமிழக உரிமையை பைவ் ஸ்டார் நிறுவனம் 15 கோடிக்கு வாங்கி உள்ளது. அதேபோல் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் 18 கோடிக்கு வாங்கி உள்ள நிலையில், தற்போது வெளிநாடு, வெளிமாநில வியாபாரங்கள் நடைபெற்று வருகிறது..