ராமேஸ்வரத்தில் விமான நிலையம் - நடவடிக்கையை தொடங்கியது தமிழ்நாடு அரசு

ராமேஸ்வரத்தில் விமான நிலையம் - நடவடிக்கையை தொடங்கியது தமிழ்நாடு அரசு
சுற்றுலாத்துறையும் மேம்படுத்தும் வகையில் விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது...

ராமேஸ்வரத்தில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்பது சுற்றுலாப் பயணிகள், பக்தர்களின் வேண்டுகோளாக இருந்து வருகிறது.

ராமநாதபுரம் மாவட்ட உட்கட்டமைப்பையும் சுற்றுலாத்துறையும் மேம்படுத்தும் வகையில் விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்பது ராமேசுவரம் வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்களின் வேண்டுகோளாக இருந்து வருகிறது.

தென் மாநிலங்களுக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகள் அதிகரித்து வரும் சூழலில், ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் பகுதியில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் ராமேஸ்வரத்தில் விமான நிலையம் அமைப்பதற்கு 5 இடங்களை தேர்வு செய்து நடவடிக்கையை தமிழ்நாடு அரசு தொடங்கியது.

ராமநாதபுரம் மாவட்ட உட்கட்டமைப்பையும் சுற்றுலாத்துறையும் மேம்படுத்தும் வகையில் விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது.

தமிழ்நாடு அரசு தேர்வு செய்துள்ள 5 இடங்களில் விமான நிலைய ஆணையம் விரைவில் ஆய்வு செய்து இடத்தை முடிவு செய்ய உள்ளது.