சென்னை ஐசிஎப்-ல் 1,010 பணியிடங்கள்: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

சென்னை,
பணி நிறுவனம்: ஐ.சி.எப், சென்னை
பணியின் தன்மை: அப்ரண்டீஸ் பயிற்சி (ஒப்பந்த அடிப்படை)
காலி இடங்கள்: 1010
பணி இடம்: சென்னை
பதவி: கார்பெண்டர், எலெக்ட்ரீஷியன், பிட்டர், மெஷினிஸ்ட், பெயிண்டர், வெல்டர், எம்.எல்.டி. (கதிரியக்கவியல், நோயியல்),
கல்வி தகுதி: பதவியின் தன்மைக்கேற்ப 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., (பட்டப்படிப்பு, என்ஜினீயரிங், டிப்ளமோ படித்தவர்கள் மற்றும் அப்ரண்டீஸ் பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதி இல்லை)
பயிற்சி காலம்: ஒரு ஆண்டு
வயது: ஐ.டி.ஐ. படித்தவர்கள் 24 வயது நிரம்பாதவர்களாகவும் இருக்க வேண்டும். ஐ.டி.ஐ. படிக்காதவர்கள் 22 வயது நிரம்பாதவர்களாகவும் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வும் உண்டு.
தேர்வு முறை: மெரிட் லிஸ்ட், ஆவண சரிபார்ப்பு
விண்ணப்பிக்க கடைசி தேதி: 11-8-2025
இணையதள முகவரி: https://pb.icf.gov.in/act2025/