அஜித்குமார் தாக்கப்பட்ட வீடியோவை நான் எடுத்தேன்' - சாட்சியை காக்க வழிகள் உள்ளதா?

அஜித்குமார் தாக்கப்பட்ட வீடியோவை நான் எடுத்தேன்' - சாட்சியை காக்க வழிகள் உள்ளதா?
அஜித்குமார் வழக்கில் முக்கிய சாட்சியான சக்தீஸ்வரன் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக புகார் கூறியிருந்தார்

அஜித்குமாரை தாக்கும் வீடியோவை நான் எடுத்தேன். இதை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த காரணத்தால் எனக்கும் என்னைச் சார்ந்தோரின் உயிருக்கும் அச்சுறுத்தல் உள்ளது" என்கிறார், திருப்புவனம் தாலுகாவில் உள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் ஊழியர் சக்தீஸ்வரன்.

தனக்கு ஆயுதமேந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்குமாறு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் பதிவாளர், டி.ஜி.பி ஆகியோருக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளார்.

அதன்படி, தென்மண்டல ஐஜி உத்தரவின் பேரில் ராமநாதபுரத்தில் இருந்து இரண்டு காவலர்கள் ஆயுதம் ஏந்திய பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

'இந்தியாவில் சாட்சிகளை பாதுகாப்பதற்கு பல்வேறு திட்டங்கள் இருந்தாலும் அதை மாநில அரசு முறையாக செயல்படுத்துவதில்லை' என சமூக ஆர்வலர்கள் விமர்சிக்கின்றனர்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் தாலுகாவில் உள்ள மடப்புரம் ஊராட்சியில் அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு கடந்த 28 ஆம் தேதியன்று வழிபாடு நடத்துவதற்காக வந்த முனைவர் நிகிதா என்பவர், தனது காரில் வைத்திருந்த ஒன்பதரை சவரன் நகையைக் காணவில்லை என திருப்புவனம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.