வாஸ்கோடகாமா கேரளாவில் ஒரு கொடூர வில்லனாக பார்க்கப்படுவது ஏன்?

வாஸ்கோடகாமா கேரளாவில் ஒரு கொடூர வில்லனாக பார்க்கப்படுவது ஏன்?
வாஸ்கோடகாமா கேரளாவில் ஒரு கொடூரன்

போர்த்துகீசியர்களின் ராஜ்ஜியத்துடன் கேழுவும் வளர்ந்தான். அவனது மனதில் ஒரு லட்சியம் வேரூன்றி இருந்தது. அது வாஸ்கோவின் ரத்தம்."

'உறுமி' எனும் பிரபல மலையாள திரைப்படத்தில், நாயகன் சிரக்கல் கேழுவின் அறிமுகக் காட்சிக்கு முன், அவர் குறித்து வரும் வசனம் இது.

அந்தத் திரைப்படத்தில், போர்த்துகீசிய மாலுமி வாஸ்கோடகாமாவை கொல்ல வேண்டும் என்பதே நாயகன் கேழுவின் வாழ்க்கை லட்சியமாக இருக்கும். அதற்காகவே அவர் பல சிரமங்களைச் சந்திப்பார், ஒரு புரட்சிப் படையைத் திரட்டுவார், போர்த்துகீசிய படைகளுக்கு எதிரான சண்டையில் தன் உயிர் நண்பனைப் பறிகொடுப்பார். இருப்பினும், தனது லட்சியத்தை நிறைவேற்ற முடியாமல் இறுதியில் உயிரிழப்பார்.

வாஸ்கோடகாமா என்ற போர்த்துகீசியரை கொல்லத் துடித்த 'சிரக்கல் கேழு' ஒரு புனைவுக் கதாபாத்திரம்தான். ஆனால் பிரித்விராஜ் ஏற்று நடித்த அந்தக் கதாபாத்திரமும், 'உறுமி' திரைப்படமும் கேரளாவில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

மேலும் சில மலையாள திரைப்படங்கள், நாட்டுப்புறப் பாடல்கள், கதைகள் என கேரளாவின் வரலாற்றுப் பக்கங்களில் இந்தியாவுக்கு கடல்வழி கண்ட வாஸ்கோடகாமா ஒரு 'வில்லனாகவே' பார்க்கப்படுகிறார்.