ரூ.8,600 கோடி சம்பளத்தில் மெடாவில் கிடைத்த வேலையை தூக்கி எறிந்த பெண்..யார் இந்த மீரா முராட்டி .

அமெரிக்கா: பெரிய டெக் நிறுவனங்கள் அனைத்தும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப போட்டியில் தீவிரமாக களமிறங்கி இருக்கின்றன. ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட் ஜிபிடிக்கு பிறகு மைக்ரோசாப்ட் ,கூகுள் , மெடா அனைத்தும் ஆடி போய் நிற்கின்றன.
ஏஐ செயலிகள்: ஏஐ தொழில்நுட்பத்தில் தங்களை வலுப்படுத்திக் கொள்வதற்காக இந்த நிறுவனங்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில் மார்க் ஜக்கர்பெர்கின் மெடா நிறுவனம் ஓபன் ஏஐ நிறுவனத்தில் வேலையில் இருப்பவர்களை எல்லாம் அதிக சம்பளத்திற்கு வேலைக்கு எடுப்பதில் முனைப்பு காட்டி வருகிறது.
ரூ. 8600 கோடி சம்பளம்: மெடா நிறுவனம் சாட் ஜிபிடி உருவாக்கத்தில் முக்கிய அங்கம் வகித்தவரும் ஓபன் ஏஐ நிறுவனத்தின் முன்னாள் தொழில்நுட்ப அதிகாரியுமான மீரா முராட்டி என்ற நிபுணருக்கு 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 8600 கோடி சம்பளமாக வழங்கு முன் வந்தது தெரியவந்திருக்கிறது. ஆனால் இந்த வேலை வேண்டாம் என மீரா முராட்டி நிராகரித்துவிட்டாராம்.
சாட்ஜிபிடி உருவாக்கம்: உலகளவில் ஜெனரேட்டிவ் ஏஐ தொழில்நுட்பத்தில் முதல் நிறுவனமான ஓபன் ஏஐ-இன் சாட் ஜிபிடி இருக்கிறது. இதன் முன்னாள் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக இருந்தவர் தான் மீரா மராட்டி. அல்பேனிய அமெரிக்கரான மீரா முராட்டி தற்போது Thinking machines lab என்ற ஒரு நிறுவனத்தை சொந்தமாக தொடங்கி இருக்கிறார்.
ஏஐ தொழில்நுட்பத்தில் நிபுணர்: உலக அளவில் ஏஐ தொழில்நுட்ப போட்டியில் முன்னிலை வகிக்கக்கூடிய முக்கியமான நபர்களில் மீரா முராட்டியும் ஒருவராக இருந்து வருகிறார். ஓபன் ஏஐ நிறுவனத்தின் முன்னாள் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக இருந்தவர் இவர் . சாட் ஜிபிடி உருவாக்கத்திலும் எளிய மக்களும் பயன்படுத்தும் வகையில் இதனை வடிவமைத்து கோடிங் செய்ததிலும் முக்கிய பங்கு இவருக்கு உண்டு.
சமூக பொறுப்புக்கு குரல் கொடுப்பவர்: ஏஐ செயலிகள் பல போட்டி போட்டு கொண்டு வந்தாலும் அதனை சமூக பொறுப்புடன் உருவாக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது என தொடர்ச்சியாக வலியுறுத்தி வருபவர் மீரா முராட்டி. சாட் ஜிபிடியில் இவரை செல்லமான ஏஐ பிரெய்ன் அதாவது ஏஐ மூளை என்று தான் செல்லமாக அழைப்பார்களாம்.
புதிய ஸ்டார்ட் அப்: முன்னதாக உலக பொருளாதார கூட்டமைப்பின் மாநாட்டில் பேசிய இவர் பொறுப்புகள் அற்ற மதிப்புகள் அற்ற ஏஐ என்பது மனசாட்சி இல்லாத புத்திசாலித்தனத்திற்கு சமம் என கூறினார். 2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் சாட் ஜிபிடியில் இருந்து வெளியேறினார். தற்போது ஏஐ அடிப்படையிலான Thinking machines lab ஸ்டார்ட் அப்பை நடத்தி வருகிறார்..
தலைமை பண்பு: இவரது நிறுவனத்தில் முன்னணி ஏஐ நிறுவனங்களின் முன்னாள் ஊழியர்கள் பலரும் வேலை செய்கின்றனர். அவர்களில் பலருக்கும் மெடா நிறுவனம் வலை வீசி பார்த்ததாம் ஆனால் அவர்களில் யாருமே நிறுவனத்தை விட்டு வெளியேற மறுத்துவிட்டார்களாம் இது மீரா முராட்டியின் தலைமை பண்புக்கு மேலும் ஒரு சான்று..