கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறுபவர்கள் இறந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்?

தமிழ்நாடு அரசு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaignar Magalir Urimai Thogai) திட்டத்தின் கீழ் 1.14 கோடி பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறது. இந்த தொகை அவர்களது வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது..
இந்தியாவில் இந்த திட்டத்தை செயல்படுத்திய முதல் மாநிலம் என்பதுடன் அதிக பெண்களுக்கு தொடர்ச்சியாக மாதம் 1000 ரூபாய் கொடுக்கும் மாநிலமாகவும் தமிழ்நாடு உள்ளது.
இப்போது இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. அதனால், இதுவரை கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயனாளியாக இல்லாத பெண்கள், அதாவது விடுபட்டவர்கள், புதிதாக ரேஷன் கார்டு பெற்றவர்கள், அரசு கொடுத்திருக்கும் விதிமுறை தளர்வுகளினால் பயன்பெறும் பெண்கள் உள்ளிட்டோர் இப்போது இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்.
ஆனால், ஒரு குடும்பத்தில் ஏற்கனவே கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறும் பெண்கள் விண்ணப்பிக்க முடியாது. அதாவது, ஒரே ரேஷன் கார்டில் பெயர்கள் இருக்கும் இரண்டு பெண்கள் இந்த திட்டத்தில் பயானியாக முடியாது..
யாரேனும் ஒருவர் மட்டுமே இந்த திட்டத்தில் பயனாளியாக சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். ஒருவேளை கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயனாளியாக இருக்கும் பெண் இறந்துவிட்டால், அந்த வீட்டில் தகுதியான மற்றொரு பெண் இருப்பின் அவர் விண்ணப்பிக்கலாம்..
திருமணம் ஆகாமல் இருந்தால் கூட விண்ணப்பிக்கலாம். ஒரே கண்டிஷன் 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்றால், இறந்தவரின் இறப்புச் சான்றிதழைப் பெற்று தாலுகா அலுவலகத்துக்கு செல்ல வேண்டும்.
இதன்பிறகு அதிகாரிகள் அந்த பெண்ணின் பெயரை கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இருந்து நீக்கிவிடுவார்கள். பின்னர், ரேஷன் கார்டில் இருந்து அவரின் பெயரை நீக்க விண்ணப்பிக்க வேண்டும்..
இவை முடிந்த பிறகு அக்குடும்பத்தில் இருக்கும் தகுதியான பெண் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு புதியதாக விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு ரேஷன் கார்டு, மின் கட்டண ரசீது, வங்கி பாஸ்புக், ஆகியவற்றை கொடுக்க வேண்டும். உங்களுடன் ஸ்டாலின் முகாமுக்கு சென்றால் உடனே கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் பெற்று விண்ணப்பித்துவிடலாம்..
ரேஷன் கார்டு பெயர் நீக்கம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இருந்து பெயர் நீக்கம் ஆகியவற்றையும் இந்த முகாமில் செய்து கொள்ளலாம். இறந்தவர்கள் விவரம் அரசுக்கு குடும்பத்தினர் தெரியப்படுத்தாவிட்டாலும், மாதாந்திர ஆய்வில் இறந்தவர்களை அரசு கணக்கெடுத்து அவர்களின் பெயரை இந்த திட்டத்தில் இருந்து நீக்கிவிடும்..
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பயனாளி லிஸ்ட் மற்றும் ரேஷன் கார்டில் இறந்தவரின் பெயரை நீக்கினால் மட்டுமே அக்குடும்பத்தில் உள்ள தகுதியான மற்றொரு பெண் இத்திட்டத்துக்கு விண்ணப்பிக்க முடியும்.