இரான், இராக், ஆப்கானிஸ்தான் - ராணுவ தலையீட்டால் அமெரிக்கா பெற்றதும் இழந்ததும் என்ன?

இரான், இராக், ஆப்கானிஸ்தான் - ராணுவ தலையீட்டால் அமெரிக்கா பெற்றதும் இழந்ததும் என்ன?
இரான், இராக், ஆப்கானிஸ்தான் - ராணுவ தலையீட்டால் அமெரிக்கா பெற்றதும் இழந்ததும் என்ன?

கடந்த மே மாதத்தில் தனக்கு முன்பிருந்த அதிபர்களின் வெளிநாட்டு விவகாரங்களில் தலையீடும் கொள்கைகளை கடுமையாக விமர்சித்தபோது, பலரின் கவனத்தை ஈர்த்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.

"இறுதியில் நாட்டை கட்டியமைத்தவர்களாக கூறப்பட்டவர்கள், அவர்கள் கட்டியமைத்ததைவிட அதிக நாடுகளை அழித்தனர்," என சர்ச்சைக்குரிய 2003ஆம் ஆண்டு இராக் படையெடுப்பை குறிப்பால் உணர்த்தி அவர் பேசினார்.

"அவர்கள் தாங்கள் புரிந்துகொள்ளாத சிக்கலான சமூகங்களில் தலையிட்டனர்," என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

செளதி தலைநகர் ரியாதுக்கு மேற்கொண்ட பயணத்தின் போது பேசப்பட்ட இந்த வார்த்தைகள், டிரம்பின் இரண்டாவது பதவிக்காலத்திலாவது, இந்தப் பகுதியில் அமெரிக்காவின் தலையீடு ஒரு கடந்த கால நிகழ்வாக இருக்கும் என்பதற்கான குறிப்பாக சில ஆய்வாளர்கள் பார்த்தனர்.

ஆனால் ஒரு மாதத்திற்கு சற்றே கூடுதலான காலத்தில், இரானில் இருக்கும் மூன்று அணுசக்தி மையங்கள் மீது தாக்குதல் நடத்தி இரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போரில் அமெரிக்கா தலையிட்டது.