மதுரை அடுத்தடுத்து சஸ்பெண்ட் செய்யப்படும் ரயில்வே ஊழியர்கள்.. கடைசி நேரத்தில் தெரிந்த பெரிய சம்பவம்

மதுரை: மதுரையில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி ரயில் நிலையம் செல்லும் வழியில் கோவில்பட்டி மற்றும் கடம்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே குறைவான தூர இடைவெளியில் 2 ரயில்கள் சென்றுள்ளன. இதில் சிக்னல் கோளாறால் ஒரு ரயில் மிகவும் குறைவான வேகத்திலும், அதன் பின்னால் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் வழக்கமான வேகத்திலும் சென்றிருக்கிறது. இந்த விவகாரத்தில் சில அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மதுரையில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி ரயில் நிலையம் செல்லும் வழியில் கோவில்பட்டி மற்றும் கடம்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே குறைவான தூர இடைவெளியில் 2 ரயில்கள் சென்றுள்ளன. இதில் சிக்னல் கோளாறால் ஒரு ரயில் மிகவும் குறைவான வேகத்திலும், அதன் பின்னால் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் வழக்கமான வேகத்திலும் சென்றிருக்கிறது.
விபத்து தவிர்ப்பு
அப்போது விபத்து ஏற்பட வாய்ப்பு இருந்தது. இதனை கண்டுபிடித்து மதுரையில் உள்ள கட்டுப்பாட்டு அலுவலர் மூலம் மின்னல் வேகத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் காரணமாக கடைசி நேரத்தில் மிகப்பெரிய ரயில் விபத்து தவிர்க்கப்பட்டது. மதுரையில் உள்ள மின்சார ரயில் பாதை கட்டுப்பாட்டாளர், மின்சாரத்தை துண்டித்து ரயில்களை நிறுத்தியதால் விபத்து ஏற்படுவது தடுக்கப்பட்டது
.பணியிடை நீக்கம்
இந்த சம்பவத்தில் மதுரை கோட்ட ரயில்வே அதிகாரிகள் தலைமையில் விசாரணை நடத்தினார்கள். இந்த விவகாரத்தில், 2 ஸ்டேஷன் மாஸ்டர்கள் மற்றும் ஒரு கேட்கீப்பர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த சம்பவம் குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் நேற்று மதுரை கோட்ட முதுநிலை பாதுகாப்பு அலுவலர் உள்ளிட்ட 20 பேரிடம் விசாரணை நடத்தியிருக்கிறார்கள். விசாரணையில் விதிமீறல் உறுதி செய்யப்பட்டால், கோட்ட அளவில் ஒரு சில அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.