சென்னையில் வேகமெடுக்கும் பறக்கும் ரயில் சேவை பணி - இன்னும் 4 மாதத்தில் பயணிக்கலாம்...

சென்னையில் வேகமெடுக்கும் பறக்கும் ரயில் சேவை பணி - இன்னும் 4 மாதத்தில் பயணிக்கலாம்...
பறக்கும் ரயில் சேவையை விரிவுபடுத்தும் பணிகள் தீவிரமடைந்து வருகின்றன. 17 கிலோமீட்டர் தூரம் முழுக்க மேம்பாலத்தில் இயங்கும் இந்த பறக்கும் ரயில்கள், குறைந்த கட்டணத்தில் பயண வசதியை வழங்குவதால் பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளன.

மக்கள் நெருக்கத்திலும், வேலை மற்றும் கல்விக்காக நகரம் நோக்கி வருவோரின் எண்ணிக்கையிலும் முன்னிலையில் உள்ளது சென்னை. சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கத்தில் பல்வேறு திட்டங்களை அரசு முன்னெடுத்து வருகிறது. மேம்பாலங்கள், பறக்கும் சாலைகள், புதிய மெட்ரோ வழித்தடங்கள் மற்றும் புறநகர் ரயில் சேவைகள் ஊடாக பெருநகரின் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் திட்டங்கள் நடைமுறையில் உள்ளன

சென்னையின் முக்கியமான புறநகர் ரயில் சேவைகள் — கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை, சென்ட்ரல் முதல் அரக்கோணம் வரை மற்றும் சென்ட்ரல் முதல் கும்மிடிப்பூண்டி வரை விரிவாக இயங்கி வருகின்றன. இந்த சேவைகள் அண்டை மாவட்டங்களில் இருந்து தினமும் லட்சக்கணக்கான பயணிகளை நகருக்கு வர பேருதவியாக உள்ளது

மேலும் கடற்கரை முதல் வேளச்சேரி வரை இயங்கி வரும் பறக்கும் ரயில் சேவையை விரிவுபடுத்தும் பணிகள் தீவிரமடைந்து வருகின்றன. 17 கிலோமீட்டர் தூரம் முழுக்க மேம்பாலத்தில் இயங்கும் இந்த பறக்கும் ரயில்கள், குறைந்த கட்டணத்தில் பயண வசதியை வழங்குவதால் பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளன.

தற்போது, இந்த சேவையை வேளச்சேரி முதல் பரங்கிமலை வரை விரிவாக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது வரும் நவம்பர் மாதம் முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரவிருக்கிறது என அமைச்சர் தா.மோ.அன்பரசன் உறுதியளித்துள்ளார்

ஆலந்தூர் தொகுதியில் நடைபெற்ற குறைதீர்க்கும் முகாமில், கடந்த 22 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள பழவந்தாங்கல் சுரங்கப்பாதை – நங்கநல்லூர் சாலை இணைப்பு திட்டம் குறித்து மக்கள் மனுக்களை அளித்தனர். இந்த திட்டத்தை விரைவில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதி செய்தார்