நீதிபதிகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர துடிப்பது கண்டிக்கத்தக்கது: எழுத்தாளர் தர்மன் கருத்து

நீதிபதிகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர துடிப்பது கண்டிக்கத்தக்கது: எழுத்தாளர் தர்மன் கருத்து
நீதிபதி ஜி.ஆர்​.சுவாமிநாதன், எழுத்தாளர் சோ.தர்மன்

மதுரை: சுதந்​திர​மாகச் செயல்​பட்​டு​வரும் நீதிப​தி​களை கட்​டுப்​பாட்​டுக்​குள் கொண்டு வரத் துடிப்​பது கண்​டிக்​கத்​தக்​கது என்று எழுத்​தாளர் சோ.தர்​மன் கூறி​யுள்​ளார்.

உயர் நீதி​மன்ற நீதிப​தி​கள் மீது அவதூறு பரப்​பும் வகை​யில் சமூக வலை​தளங்​களில் வீடியோ வெளி​யிட்​டதற்​காக வழக்​கறிஞர் வாஞ்​சி​நாதன் மீது நடவடிக்கை எடுக்​கு​மாறு, சென்னை உயர் நீதி​மன்​ற தலைமை நீதிப​திக்கு உயர் நீதி​மன்ற நீதிப​தி​கள் ஜி.ஆர்​.சு​வாமி​நாதன், கே.​ராஜசேகர் அமர்வு பரிந்​துரை செய்​துள்​ளது.

இந்த விவ​காரம் தொடர்​பாக எழுத்​தாளர் சோ.தர்​மன், அவரது முகநூல் பக்​கத்​தில் வெளி​யிட்​டுள்ள பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: ஆணிவேரில் வெந்நீர் உயர் நீதி​மன்ற நீதிபதி ஜி.ஆர்​.சு​வாமி​நாதனுக்கு ஆதர​வாக​வும், எதி​ராக​வும் ஆர்ப்​பாட்​டங்​கள் நடை​பெறுகின்​றன. அவர் சாதிய மனோ​பாவத்​துடன் செயல்​படு​வ​தாக வழக்​கறிஞர் ஒரு​வர் குற்​றம்​சாட்​டியது போராட்​ட​மாக மாறி​விட்​டது. இந்​தக் குற்​றச்​சாட்டு நீதித்​துறை​யின் ஆணிவேரில் வெந்​நீரை ஊற்​று​வது​போல உள்​ளது.

நீதிப​தி​களின் தீர்ப்​பு​களை விவா​திக்​கலாம், கருத்து கூறலாம். ஆனால், நீதிப​தி​கள் சாதி மனோ​பாவத்​துடன் செயல்​படு​கிறார்​கள் என்ற குற்​றச்​சாட்டை நினைத்​துப் பார்க்​கவே பயமாக இருக்​கிறது. குற்​றம் சுமத்​தப்​பட்ட ஒரு​வரை தக்க சாட்​சி​யங்​கள் இல்​லாததால் நீதிபதி விடு​தலை செய்​கிறார். குற்​ற​வாளி​யும் நீதிப​தி​யும் ஒரே சாதி என்​ப​தால் விடு​தலை செய்​து​விட்​டார் என்​றோ, தண்​டனை வழங்​கி​னால் நீதிப​தி​யும், குற்​ற​வாளி​யும் எதிர் சாதி என்​ப​தால் தண்​டித்து விட்​டார் என்​றோ, ஒரே சாதி​யைச் சேர்ந்​தவர் என்​ப​தால் முன்​ஜாமீன் வழங்கி விட்​டார் என்றோ கூறு​வது ஏற்​கத்​தக்​கதல்ல. இது​வரை இம்​மா​திரி​யான குற்​றச்​சாட்டு எந்த நீதிப​தி​யின் மீதும் சுமத்​தப்​பட்​ட​தில்லை.

 நீதிபதி ஜி.ஆர்​.சு​வாமி​நாதன் சில ஆண்​டு​களுக்கு முன்பு எனது முகநூல் பதிவு ஒன்​றை, அவரது தீர்ப்​பில் மேற்​கோள் காட்​டி​யிருந்​தார். இரண்டு ஆண்​டு​கள் கழித்து மதுரை​யில் நடை​பெற்ற ஒரு புத்தகவெளி​யீட்டு விழா​வில் அவரை சந்​தித்​தேன். சாப்​பிட அமர்ந்​திருந்த அவரிடம் என்னை அறி​முகம் செய்​து​கொண்​டேன். உடனே அவர் எழுந்​து, என் கைகளைப் பிடித்து இழுத்​து கொண்​டு​போய் அவருக்கு அடுத்த இருக்​கை​யில் அமரச்​செய்து, எனக்​கும் உணவு பரி​மாற வைத்​தார். வெகு நாட்​கள் பழகிய நண்​பரைப்​போல பல விஷ​யங்​கள் பேசி​னார். அவர் சாதிய மனோ​பாவம் கொண்​ட​வ​ராக இருந்​திருந்​தால், என்னை அரு​கில் அமர வைத்​து, உணவருந்தி இருப்​பா​ரா? அவரிடம் எப்​படி சாதி துவேஷம் இருக்கும்?

நீதி​மன்​றங்​களில் சாதி மனோ​பாவத்​துடன் நீதிப​தி​கள் செயல்​படு​கிறார்​கள் என்ற குற்​றச்​சாட்​டு​கள் கிடை​யாது. சுதந்​திர​மாக செயல்​படும் நீதி​யரசர்​களை தங்​கள் கட்​டுப்​பாட்​டுக்​குள் கொண்டு வரத் துடிக்​கும் சக்​தி​களின் செயல்​பாடு​கள் கண்​டிக்​கத்​தக்​கவை. இவ்​வாறு அவர் கூறி​யுள்​ளார்.

மூத்த வழக்​கறிஞர் பதிவு: இதே​போல, உயர் நீதி​மன்ற மூத்த வழக்​கறிஞர் லஜப​தி​ராயின் பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: வழக்​கறிஞர் வாஞ்​சி​நாதன் மீது நீதி​மன்ற அவம​திப்பு வழக்கு தொடரக்​கூ​டாது. அதைக் கைவிடவேண்​டும் என்​ப​தில் எந்த மாற்​றுக்கருத்​தும் இல்​லை. ஆனால், நீதிபதி ஜி.ஆர்​.சு​வாமி​நாதனை சாதி வெறியர் போல சமூக ஊடகங்​களில் சித்​தரிப்​பது நியாயமற்​றது. அவ்​வாறான எண்​ணத்தை நீதிபதி கொண்​டிருந்​தால், அருந்​த​தி​யர் சமூக இடஒதுக்​கீடு வழக்​கில், ஒத்த கருத்​துடைய வழக்​கறிஞர் நண்​பர்​களு​டன் இணைந்து வெற்​றி​பெற தீவிர​மாக உழைத்​திருக்க மாட்​டார்.

ஸ்டெர்​லைட் தொடர்​புடைய குற்ற வழக்​கு​களில் வழக்​கறிஞர் வாஞ்​சி​நாதனுக்கு 50-க்​கும் அதி​க​மான வழக்​கு​களில் பிணை வழங்கி உத்​தர​விட்​டிருக்க மாட்​டார். நீதிபதி ஒரு​வர் தவறிழைத்​தால் முதலில் அதுகுறித்து விவா​திக்க வேண்​டியது அந்​தந்த மாவட்ட வழக்​கறிஞர் சங்​கங்​களே. அதன்​படி, பொது தலத்​தில் வெளி​யான வாஞ்​சி​நாதன் புகார் குறித்து விவா​தித்​து, அதன் மெய்த்​தன்மை தொடர்​பாக அறிவிக்க முன்வர வேண்​டியது மதுரை அமர்​வின் 5 வழக்​கறிஞர் சங்​கங்​களே. தற்​போது நில​வும் சூழல், நீதித்​துறை அமைப்​பு மேலும்​ பலவீனப்​பட​வே வழி​வகுக்​கும்​. இவ்​வாறு அவர்​ குறிப்​பிட் டுள்ளார்.