பெங்களூர் 5 ஆக உடைகிறது.. கர்நாடக துணை முதல்வர் வெளியிட்ட முழு விபரம்..!!

இந்தியாவின் தொழில்நுட்ப தலைநகரமான பெங்களூரு தனது புதிய அத்தியாயத்தை தொடங்கவுள்ளது. இப்போது நம்ம பெங்களூரூ என அழைக்கப்படும் நகரம் இனி க்ரீட்டர் பெங்களூரு என்று அழைக்கப்படும். பெங்களூர் தனது அடுத்தகட்ட வளர்ச்சிக்கு தயாராகும் நோக்குடன் பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய தீவிரமாக உள்ளது.
பெங்களூர் நகரம் இனி ஐந்து கார்ப்பரேஷன்களாக நிர்வாகம் செய்யப்பட்டு மிகவும் சிறப்பான நகரமாக விரிவாக்கம் செய்ய விதை விதிக்கப்பட்டு உள்ளது. பெங்களூர் வடக்கு, தெற்கு, கிழக்கு, வடக்கு, மத்திய பெங்களூர் என 5 பகுதிகளாக பிரிக்கப்பட்டு உள்ளது.
இந்த புதிய மாதிரியில் முதல் முறையாக பெங்களூருவை ஒரு மைய நிர்வாகமாக (BBMP) இல்லாமல் பிரித்து நிர்வாகம் செய்யப்பட உள்ளது. இப்புதிய மாடலில் பொதுமக்களுக்கும், அவர்களின் நலனுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது.
Loaded: 100.00% பெங்களூரை 5 பகுதிகளாக பிரித்து நிர்வாகம் செய்யும் போது, ஒவ்வொரு பகுதிக்கும் தேவையான சேவைகளை வேகமாக செய்ய முடியும், சிறப்பான திட்டமிடல் உடன் நகரத்தை மேம்படுத்த முடியும், மேலும் நகரத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதுடன் புதிய முதலீடுகளை ஈர்பதில் வலுவாக வளரவும் உதவும் என்று நம்பப்படுகிறது. பெங்களூர் கடந்த சில ஆண்டுகளாக டிராபிக் முதல் பல பிரச்சனைகளையும், விமர்சனங்களையும் எதிர்கொண்டு வருகிறது. இதேபோல் பலர் பெங்களூரை விட்டு வெளியேறவும் தயாராகி வருகின்றனர். இதை சரி செய்யவே இந்த புதிய மாடல், இது ஒரு மறுசீரமைப்பு மட்டுமல்ல, நாளைய பெங்களூருவிற்கான ஒரு பயணமாக இருக்கும் என கர்நாடக அரசு நம்புகிறது. இது, நகரின் அடிப்படை கட்டமைப்பு மற்றும் பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...
இந்த நிலையில் கர்நாடக மாநில துணை முதல்வர் இந்த முடிவு குறித்து முக்கியமான விபரத்தை டிவிட்டர் வாயிலாக வெளியிட்டு உள்ளார். இதில் எந்த பிரிவில் எந்த பகுதிகள் வருகிறது என்பது குறித்து முழுமையான விளக்கம் உள்ளது. பெங்களூர் வடக்கு மண்டலம் (158 சதுரகிமீ, 18 லட்சம் மக்கள்): பயதராயனபுரா, தசரஹள்ளி ( இதில் ஷெட்டிஹள்ளி, மல்லசந்திரா, பகலகுண்டே, டி தசரஹள்ளி ஆகியவை இடம்பெறாது), ஹெப்பால், புலகேசினகர் (குஷால் நகர் இடம்பெறாது), ஆர் ஆர் நகர் (ஜாலஹள்ளி, ஜேபி பார், யெஷ்வந்த்பூர் தவிர), சர்வஜ்ஞநகர், யெலஹங்கா பெங்களூர் மத்திய மண்டலம் (78 சதுரகிமீ, 15 லட்சம் மக்கள்): சி.வி. ராமன் நகர், சாமராஜ்பேட்டை, சிக் பேட்டை, காந்திநகர், ஷாந்திநகர், சிவாஜிநகர்.
பெங்களூர் கிழக்கு மண்டலம் (168 சதுரகிமீ, 9 லட்சம் மக்கள்): கேஆர் புரம், மகாதேவபுரா (பெல்லந்தூர் வார்டு தவிர) பெங்களூர் தெற்கு மண்டலம் (147 சதுரகிமீ, 17 லட்சம் மக்கள்): பிடிஎம் லேஅவுட், பெங்களூர் தெற்கு, பொம்மனஹள்ளி, ஜெயாநகர், மகாதேவபுரம் (பெல்லந்தூரின் ஒரு பகுதி), பத்மநாபநகர் (பனசங்கரி கோவில், குமாரசாமி லேஅவுட், பத்மநாபநகர், சிக்கல்சன்றா), ஆர் ஆர் நகர் (ஆர் ஆர் நகர் வார்டு), யெஷ்வந்த்பூர் (ஹெம்மிகேபுராவின் ஒரு பகுதி
Loaded: 100.00% பெங்களூரை 5 பகுதிகளாக பிரித்து நிர்வாகம் செய்யும் போது, ஒவ்வொரு பகுதிக்கும் தேவையான சேவைகளை வேகமாக செய்ய முடியும், சிறப்பான திட்டமிடல் உடன் நகரத்தை மேம்படுத்த முடியும், மேலும் நகரத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதுடன் புதிய முதலீடுகளை ஈர்பதில் வலுவாக வளரவும் உதவும் என்று நம்பப்படுகிறது. பெங்களூர் கடந்த சில ஆண்டுகளாக டிராபிக் முதல் பல பிரச்சனைகளையும், விமர்சனங்களையும் எதிர்கொண்டு வருகிறது. இதேபோல் பலர் பெங்களூரை விட்டு வெளியேறவும் தயாராகி வருகின்றனர். இதை சரி செய்யவே இந்த புதிய மாடல், இது ஒரு மறுசீரமைப்பு மட்டுமல்ல, நாளைய பெங்களூருவிற்கான ஒரு பயணமாக இருக்கும் என கர்நாடக அரசு நம்புகிறது. இது, நகரின் அடிப்படை கட்டமைப்பு மற்றும் பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெங்களூர் மக்களே இனிமே Traffic பத்தி கவலையே வேண்டாம்! ஆகஸ்ட்ல இருந்து எல்லாமே மாறப் போகுது!! இந்த நிலையில் கர்நாடக மாநில துணை முதல்வர் இந்த முடிவு குறித்து முக்கியமான விபரத்தை டிவிட்டர் வாயிலாக வெளியிட்டு உள்ளார். இதில் எந்த பிரிவில் எந்த பகுதிகள் வருகிறது என்பது குறித்து முழுமையான விளக்கம் உள்ளது. பெங்களூர் வடக்கு மண்டலம் (158 சதுரகிமீ, 18 லட்சம் மக்கள்): பயதராயனபுரா, தசரஹள்ளி ( இதில் ஷெட்டிஹள்ளி, மல்லசந்திரா, பகலகுண்டே, டி தசரஹள்ளி ஆகியவை இடம்பெறாது), ஹெப்பால், புலகேசினகர் (குஷால் நகர் இடம்பெறாது), ஆர் ஆர் நகர் (ஜாலஹள்ளி, ஜேபி பார், யெஷ்வந்த்பூர் தவிர), சர்வஜ்ஞநகர், யெலஹங்கா பெங்களூர் மத்திய மண்டலம் (78 சதுரகிமீ, 15 லட்சம் மக்கள்): சி.வி. ராமன் நகர், சாமராஜ்பேட்டை, சிக் பேட்டை, காந்திநகர், ஷாந்திநகர், சிவாஜிநகர். பெங்களூர் கிழக்கு மண்டலம் (168 சதுரகிமீ, 9 லட்சம் மக்கள்): கேஆர் புரம், மகாதேவபுரா (பெல்லந்தூர் வார்டு தவிர) பெங்களூர் தெற்கு மண்டலம் (147 சதுரகிமீ, 17 லட்சம் மக்கள்): பிடிஎம் லேஅவுட், பெங்களூர் தெற்கு, பொம்மனஹள்ளி, ஜெயாநகர், மகாதேவபுரம் (பெல்லந்தூரின் ஒரு பகுதி), பத்மநாபநகர் (பனசங்கரி கோவில், குமாரசாமி லேஅவுட், பத்மநாபநகர், சிக்கல்சன்றா), ஆர் ஆர் நகர் (ஆர் ஆர் நகர் வார்டு), யெஷ்வந்த்பூர் (ஹெம்மிகேபுராவின் ஒரு பகுதி) பெங்களூர் மேற்கு மண்டலம் (161 சதுரகிமீ, 26 லட்சம் மக்கள்): பசவனகுடி, தசரஹள்ளி (சொக்காசந்திரா, பி.ஐ.ஏ, ராஜகோபாலநகர், பீனிய தொழில்துறை), கோவிந்தராஜ நகர், மகாலக்ஷ்மி லேஅவுட், மல்லேஷ்வரம், பத்மநாபநகர் (ஹோசகெரெஹள்ளி, கணேஷ் கோயில், காரி சந்திரா, யேடியூர்), ராஜாஜி நகர், ஆர் ஆர் நகர் (எச்எம்டி, லக்ஷ்மீதேவிநகர், லக்வேர், கொட்டெகேபாள்யா, ஞானபாரதி, ஆர் ஆர் நகர் வார்டு), விஜய நகர்...