தமிழக பண்பாட்டை உலகம் முழுவதும் பரப்பிய பெரியபுராணம்’ - தெய்வ சேக்கிழார் விழாவில் தருமபுரம் ஆதீனம் புகழாரம்

தமிழக பண்பாட்டை உலகம் முழுவதும் பரப்பிய பெரியபுராணம்’ - தெய்வ சேக்கிழார் விழாவில் தருமபுரம் ஆதீனம் புகழாரம்
சேக்கிழார் ஆராய்ச்சி மையம் மற்றும் ராமச்சந்திரா மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகம் சார்பில் 33-ம் ஆண்டு தெய்வ சேக்கிழார் விழா சென்னையில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில், ‘தென்றமிழ் பயன்’ நூலின் முதல் பிரதியை தருமபுரம் ஆதீனம் வெளியிட, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பெற்றுக்கொண்டார். உடன் பெருங்குளம் ஆதீனம் சிவப்பிரகாச தேசிக சத்திய ஞான சுவாமிகள், திண்டுக்கல் சிவபுரம் ஆதீனம் திருநாவுக்கரசு தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், சேக்கிழார் ஆராய்ச்சி மைய தலைவர் எஸ்.ஜெகதீசன், செயலாளர் சிவாலயம் ஜெ.மோகன் உ

சென்னை: சேக்​கிழார் ஆராய்ச்சி மையம் சார்​பில் 33-ம் ஆண்டு தெய்வ சேக்​கிழார் விழா சென்​னை​யில் நடை​பெற்​றது. பல்​வேறு ஆதீன கர்த்​தர்​கள் பங்​கேற்​றனர். சேக்​கிழார் ஆராய்ச்சி மையம், ஸ்ரீராமச்​சந்​திரா மருத்​து​வம் மற்​றும் ஆராய்ச்சி பல்​கலைக்​கழகம்சார்​பில் 33-ம் ஆண்டு தெய்வ சேக்​கிழார் விழா சென்னை திரு​வான்​மியூர் ராமச்​சந்​திரா கன்​வென்​ஷன் மையத்​தில் நடந்து வரு​கிறது.

2-ம் நாள் விழா நேற்று நடை​பெற்றது. இந்நிகழ்ச்​சி​யில் தரு​மபுரம் ஆதீனம் 27-வது குரு​மகா சந்​நி​தானம் கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்​பந்த பரமாச்​சா​ரிய சுவாமிகளின் மணி விழா நடை​பெற்​றது. தொடர்ந்​து, தருமை ஆதீன புல​வர் சி.அருணைவடி வேல் எழு​திய ‘தென்​றமிழ் பயன்’ நூல் வெளி​யிடப்​பட்​டது. நூலின் முதல் பிர​தியை தரு​மபுரம் ஆதீனம் வெளி​யிட, திருக்​கயி​லாய பரம்​பரை திரு​வண்​ணா​மலை ஆதீனம் 46-வது குரு​மகா சந்​நி​தானம் குன்​றக்​குடி பொன்​னம்பல அடிகளார் பெற்​றுக்​கொண்​டார்.

நிகழ்ச்​சி​யில் தரு​மபுர ஆதீனம் தலை​மையேற்று அருளாசி வழங்கி பேசி​ய​தாவது: சேக்​கிழார் நமக்கு கொடுத்த பெரிய கொடை, பண்​பாட்டு பெட்​டகம் பெரியபு​ராணம். நாயன்​மார்​கள் ஒவ்​வொரு​வரும் தனித்​தனி தொண்​டு​களை செய்​துள்​ளனர். தொண்​டுக்கு தடங்​கலோ, இடையூறோ வரும் சூழலில், உயிரை மாய்த்​துக் கொள்​வார்​களே தவிர, பின்​வாங்​கியது இல்​லை. அதனால்​தான் பெரிய​வர்​களாக உயர்ந்​ தனர். அந்த புராண​மும் ‘பெரிய புராணம்’ என பெயர் பெற்​றது.

பட்​டிதொட்​டிதோறும் சென்று நாயன்​மார்​களின் வரலாற்றை காலத்​தோடு தொகுத்து ஒரு நூலை

கொடுக்​கும் சீரிய பணியை சேக்​கிழார் பெரு​மான் செய்​துள்​ளார். பெரியபு​ராணம் இல்​லா​விட்​டால், தமிழகத்​தின் பண்​பாடு இன்று உலக அளவில் தெரிந்​திருக்​காது. இவ்​வாறு அவர் பேசி​னார்.

தணி​கைமணி ராவ்​பகதூர் வ.சு.செங்​கல்​வ​ராயரின் ‘சி​வாலய தேவார ஒளிநெறி மற்​றும் கட்​டுரைகள் - 15 நூல்​களின்’ ஆய்வரங்கமும் நடை​பெற்​றது. நிகழ்ச்​சி​யில், பெருங்​குளம் செங்​கோல் மடத்​தின் 103-வது ஆதீனம் சிவப்​பிர​காச தேசிக சத்தியஞான சுவாமிகள், திண்​டுக்​கல் சிவபுரம் ஆதீனம் திரு​நாவுக்​கரசு தேசிக பரமாச்​சா​ரிய சுவாமிகள், சேக்​கிழார் ஆராய்ச்சிமைய தலை​வர் நீதிபதி எஸ்​. ஜெகதீசன், செய​லா​ளர் சிவால​யம் ஜெ.மோகன், தஞ்சை தமிழ் பல்​கலைக்​கழக முன்​னாள் துணைவேந்​தர் இ.சுந்​தரமூர்த்​தி, தமிழ் தொல்​லியல் அறிஞர் சித்ரா கணப​தி, தருமை ஆதீன புல​வர்​கள் அருணை பாலறா​வாயன், தெ.​முரு​க​சாமி உள்​ளிட்​ட பலர்​ கலந்​து கொண்​டனர்.