எனக்கு வேற வழி தெரியல.. UPI-க்கு பதிலாக ரொக்கம் வாங்கும் வணிகர்கள்.. கர்நாடக அரசின் அடுத்த நடவடிக்கை!

எனக்கு வேற வழி தெரியல.. UPI-க்கு பதிலாக ரொக்கம் வாங்கும் வணிகர்கள்.. கர்நாடக அரசின் அடுத்த நடவடிக்கை!
யுபிஐ பரிவர்த்தனைகளை அடிப்படையாக கொண்ட ஜிஎஸ்டி அமலாக்கம்

யுபிஐ பரிவர்த்தனைகளை அடிப்படையாக கொண்ட ஜிஎஸ்டி அமலாக்கம் (GST Enforcement based UPI Transactions) தொடர்பாக "பதிவு செய்யப்படாத" வர்த்தகர்களிடமிருந்து (Unregistered traders) எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், ஜிஎஸ்டி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த கர்நாடக அரசு மாநிலம் தழுவிய ஒரு திட்டத்தைத் தொடங்கி உள்ளது...

கர்நாடக வணிக வரித்துறை ஆனது பெங்களூரு கோரமங்கலாவில் நடைபெற்ற முதல் வொர்க் ஷாப் உடன் அதன் "க்னோ ஜிஎஸ்டி" (Know GST) என்கிற பிரச்சாரத்தை தொடங்கியது. வணிகர்களின் வருடாந்திர வருவாய் (Annual Income) ஆனது பொருட்களுக்கு ரூ.40 லட்சத்தையோ அல்லது சேவைகளுக்கு ரூ.20 லட்சத்தையோ தாண்டினால், அதை பதிவு செய்ய வேண்டும் என்று ஜிஎஸ்டி விதிகள் (GST Rules) கூறுகிறது...

இந்த மாத தொடக்கத்தில், யுபிஐ தரவை (UPI Data) பயன்படுத்தி வணிக வரித்துறை ஆனது சுமார் 14,000 வர்த்தகர்களை கண்காணித்தது. அதில் பலர் குறிப்பிட்ட வரம்புகளுக்கு அப்பால் சென்றுள்ளதும் கண்டறியப்பட்டது. அதனை தொடர்ந்து 2021-22 முதல் வரி நிலுவைத் தொகையை (Tax arrears from 2021-22 onwards) செலுத்துமாறு வணிகர்களிடம் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது...

இதன் விளைவாக பல வர்த்தகர்கள் க்யூஆர் கட்டணங்களை (QR Payments) ஏற்றுக்கொள்வதை நிறுத்தி, வாடிக்கையாளர்கள் வாங்கிய பொருட்களுக்கு ரொக்கமாக பணம் (Cash Payment) செலுத்துமாறு கோரினர். மேலும் "பதிவு செய்யப்படாத வர்த்தகர்கள்" கர்நாடக கர்மிகா பரிஷத்தின் கீழ் ஒரு மன்றத்தை உருவாக்க ஜூலை 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்தத்திற்கும் (Strike) அழைப்பு விடுத்துள்ளனர்.பால் உட்பட பல அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்வதை நிறுத்துவதாக (Complete Shutdown) அச்சுறுத்தி, ஜூலை 25 ஆம் தேதி அன்று முழு கடை அடைப்புக்கும் திட்டமிட்டுள்ளனர். டிஓஐ (TOI) அறிக்கையின்படி இதுகுறித்து பேசிய கேகேபி தலைவர் ரவி ஷெட்டி பைந்தூர் "நோட்டீஸ் பெற்ற பெரும்பாலான வணிகர்கள் பேக்கரிகள் மற்றும் காண்டிமென்ட் கடைகளின் உரிமையாளர்கள் ஆவர். யுபிஐ பரிவர்த்தனைகளில் தனிப்பட்ட பேமண்ட்களும் அடங்கும், அவைகள் நாங்கள் செய்யும் வணிகத்தை பிரதிபலிக்காது" என்று கூறியுள்ளார்...

மேலும் அவர் "2017 இல் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து வணிக வரித் துறை தூக்கத்தில் இருந்தது, திடீரென்று நிலுவை தொகையைக் கேட்டு எழுந்துள்ளது. இந்த நடவடிக்கை தன்னிச்சையானது மற்றும் சட்டவிரோதமானது" என்றும் கேகேபி தலைவர் ரவி ஷெட்டி பைந்தூர் (KKP president Ravi Shetty Byndur) காட்டமாக கூறி உள்ளார்..

நிதித்துறையை வைத்திருக்கும் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இந்த விவகாரத்தை ஒன்றிய அரசிடம் எடுத்துச் செல்வதாக வணிகர்களிடம் உறுதியளித்துள்ளார். இதுகுறித்த வணிகர்களின் கவலைகளை நிவர்த்தி செய்யுமாறும் அவர் வணிக வரித்துறையிடம் கேட்டுக் கொண்டுள்ளார். இதன் விளைவாகவே "க்னோ ஜிஎஸ்டி" பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது..

தகுதியுள்ள வர்த்தகர்களைப் பதிவு செய்வதே இதன் நோக்கம். சுயநலம் கொண்டவர்களால் தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. நாங்கள் அனுப்பிய அறிவிப்புகள் வரி கோரிக்கைகள் அல்ல - நாங்கள் இன்னும் வரியை மதிப்பிடவில்லை. பரிவர்த்தனை விவரங்களை மட்டுமே சமர்ப்பிக்குமாறு வணிகர்களிடம் கேட்டுக்கொள்கிறோம்" என்று வணிக வரி ஆணையர் விபுல் பன்சால் கூறி உள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது...

கர்நாடக வணிக வரித் துறையை தொடர்ந்து, தமிழ்நாடு, ஆந்திரா, உத்தரப் பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய நான்கு மாநிலங்களும் கூட இதே செயல்முறையை கொண்டுவரலாம் என்றும், இதற்காக பேமண்ட் அக்ரிகேட்டர்களிடமிருந்து வணிகர்களின் வருடாந்திர வருவாய் தரவை கேட்டுள்ளதாகவும் மணிகண்ட்ரோல் (moneycontrol.com) வலைத்தளதின் சமீபத்திய அறிக்கை கூறுகிறது. ஒட்டுமொத்தமாக ஜிஎஸ்டி - யுபிஐ தொடர்பான குழப்பங்களுக்கு தெளிவும், கேள்விகளுக்கு பதில்களும் மற்றும் அதுசார்ந்த சரியான புரிதல்களும் வரும்வரும் நிலைமை சரி ஆகாது என்றே தோன்றுகிறது..