அமிதாப் பச்சன் பயன்படுத்திய சொகுசு காருக்கு ரூ.38.26 லட்சம் அபராதம்

அமிதாப் பச்சன் பயன்படுத்திய சொகுசு காருக்கு ரூ.38.26 லட்சம் அபராதம்
ரோல்ஸ் ராய்ஸ் பேண்டம் கார் மாநிலத்தில் இயக்குவது கண்டுபிடிக்கப்பட்டது.

ரோல்ஸ் ராய்ஸ் பேண்டம் காருக்கு அபராதம் மற்றும் வரி தொகைக்கான ரசீதை அதிகாரிகள் வழங்கினர்.

2021-ம் ஆண்டு முதல் ரோல்ஸ் ராய்ஸ் பேண்டம் கார் மாநிலத்தில் இயக்குவது கண்டுபிடிக்கப்பட்டது.

பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன் பெயரில் பதிவு செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் பேண்டம் காரும், அமீர் கான் பெயரில் பதிவு செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரும் பெங்களூரு நகரில் சில ஆண்டுகளாக இயங்கி வந்தன.

இதில் ரோல்ஸ் ராய்ஸ் பேண்டம் காரை பெங்களூரு வசந்தம் நகரில் வசிக்கும் தொழிலதிபர் கே.ஜி.எப். பாபு ஒரு திரைப்பட நடிகரிடமிருந்து வாங்கியிருந்தார்.

அப்போது, வாங்குபவர் 15 நாட்களுக்குள் ஆவணங்களை தனது பெயருக்கு மாற்ற வேண்டும் என்று ஒரு கடிதம் வழங்கப்பட்டது.

இருப்பினும், வாங்கிய பிறகு கே.ஜி.எப். பாபு அதை தனது பெயரில் பதிவு செய்யவில்லை. மேலும் இந்த காருக்கு உரிய வரி செலுத்தாமலும் ஓட்டி வந்தார்.

இது குறித்த தகவல் கிடைத்ததை அடுத்து போக்குவரத்து இணை ஆணையர் ஷோபாவின் வழிகாட்டுதலின் கீழ் அதிகாரிகள் வசந்தம் நகரில் உள்ள தொழிலதிபர் கே.ஜி.எ.ப் பாபுவின் வீட்டில் சோதனை நடத்தினர்.

அங்கு நிறுத்தி வைத்திருந்த ரோல்ஸ் ராய்ஸ் பேண்டம் காருக்கு அபராதம் மற்றும் வரி தொகைக்கான ரசீதை அதிகாரிகள் அவரிடம் வழங்கினர்.

உரிய கட்டணம் செலுத்தாமல் 2021-ம் ஆண்டு முதல் ரோல்ஸ் ராய்ஸ் பேண்டம் கார் மாநிலத்தில் இயக்குவது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக அமிதாப் பச்சனுக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அந்த கார் தற்காலிகமாக பெங்களூருக்கு கொண்டு வரப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.