உலகின் முதல் ஏடிஎம் இயந்திரத்தை கண்டுபிடித்தது யார்...? இந்தியாவில் ஏடிஎம் எப்போது வந்தது தெரியுமா...?

உலகின் முதல் ஏடிஎம் இயந்திரத்தை கண்டுபிடித்தது யார்...? இந்தியாவில் ஏடிஎம் எப்போது வந்தது தெரியுமா...?
ஏடிஎம் வந்த புதிதில், ஒரே நேரத்தில் £10 வரை மட்டுமே மக்களால் எடுக்க முடிந்தது.

ஏடிஎம் வந்த புதிதில், ஒரே நேரத்தில் £10 வரை மட்டுமே மக்களால் எடுக்க முடிந்தது. இருப்பினும், வங்கிகள் மூடப்பட்டிருந்தாலும்கூட பணத்தை எடுக்கும் சுதந்திரத்தை மக்களுக்கு வழங்கியதால், இது மிகப்பெரிய விஷயமாகப் பார்க்கப்பட்டது

சரியாக 58 ஆண்டுகளுக்கு முன்பு ஜூன் 27, 1967 அன்று, லண்டனில் உள்ள என்ஃபீல்ட் என்ற நகரத்தில் உலகின் முதல் ஏடிஎம் (தானியங்கி பணம் எடுக்கும் இயந்திரம்) நிறுவப்பட்டது. இந்த இயந்திரம் பார்க்லேஸ் வங்கியின் கிளைக்கு வெளியே அமைக்கப்பட்டு, அதற்கு "பார்க்லேகாஷ்" என்று பெயரிடப்பட்டது. இதன் திறப்பு விழாவை அந்த நேரத்தில் பிரபலமான பிரிட்டிஷ் நடிகரான ரெக் வார்னி நிகழ்த்தினார்.

ஏடிஎம் வந்த புதிதில், ஒரே நேரத்தில் £10 வரை மட்டுமே மக்களால் எடுக்க முடிந்தது. இருப்பினும், வங்கிகள் மூடப்பட்டிருந்தாலும்கூட பணத்தை எடுக்கும் சுதந்திரத்தை மக்களுக்கு வழங்கியதால், இது மிகப்பெரிய விஷயமாகப் பார்க்கப்பட்டது. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக வங்கி சேவைகளைப் பயன்படுத்தும் விதத்தை மாற்றத் தொடங்கியது

ஏடிஎம் இயந்திரத்தை கண்டுபிடித்தது யார்?: 1925-ம் ஆண்டு மேகாலயாவின் ஷில்லாங்கில் பிறந்த ஜான் ஷெப்பர்ட்-பரோன் என்பவரால் ஏடிஎம் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கான யோசனை அவருக்கு சாதாரணமான பிரச்சினையின் மூலமாகவே வந்தது. அதாவது, அவருக்குப் பணம் தேவைப்பட்ட சமயத்தில், வங்கி மூடப்பட்டிருந்ததால் அவரால் பணத்தை உரிய நேரத்தில் பெற முடியவில்லை

அப்போதுதான் அவருக்கு இந்த யோசனை பிறந்தது. "வெண்டிங் மெஷின்களால் சாக்லேட்டுகளை வழங்க முடியும் என்றால், பணம் கொடுக்கும் ஒன்றை நாம் ஏன் கொண்டுவர முடியாது?" இந்த யோசனையை அவர் பார்க்லேஸ் வங்கியின் அதிகாரிகளுடன் பகிர்ந்து கொண்டார். அவர்களுக்கு அது பிடித்துப் போகவே, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, முதல் ஏடிஎம் யதார்த்தமானது.

அன்றாட சிரமத்திற்கு எளிய தீர்வாகத் தொடங்கிய ஏடிஎம், நவீன வங்கியின் மிகப்பெரிய கண்டுபிடிப்புகளில் ஒன்றாக மாறியது. இதன் மூலம் உலகெங்கிலும் உள்ள மக்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் தங்கள் பணத்தைப் பெற முடிந்தது.