வந்தது அமைச்சர்னு தெரியாமல் அலட்சியமாக பதிலளித்த அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்! அடுத்து நடந்த ட்விஸ்ட்

வந்தது அமைச்சர்னு தெரியாமல் அலட்சியமாக பதிலளித்த அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்! அடுத்து நடந்த ட்விஸ்ட்
கரூர் அருகே நேற்று இரவு திடீர் ஆய்வில் ஈடுபட்ட அமைச்சர் சிவசங்கரை அடையாளம் கண்டு கொள்ளாத டிரைவர் மற்றும் கண்டக்டர் இருவரும், அமைச்சர் கேட்ட கேள்விக்கு அலட்சியமாக பதில் கொடுத்தனர்

கரூர்: கரூர் அருகே நேற்று இரவு திடீர் ஆய்வில் ஈடுபட்ட அமைச்சர் சிவசங்கரை அடையாளம் கண்டு கொள்ளாத டிரைவர் மற்றும் கண்டக்டர் இருவரும், அமைச்சர் கேட்ட கேள்விக்கு அலட்சியமாக பதில் கொடுத்தனர். இதையடுத்து, அமைச்சர் சிவசங்கர் தான் என்று கூறியதும் ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்த டிரைவரும் கண்டக்டரும் அதிர்ச்சியில் உறைந்தனர். இது குறித்த விவரங்களை பார்க்கலாம்

தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேருந்துகளில் அவ்வப்போது திடீரென்று ஆய்வு செய்து பயணிகளின் குறைகளை கேட்டறிந்து வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். குறிப்பாக பண்டிகை நாட்களில் சிறப்பு பேருந்துகள் முறையாக இயக்கப்படுகிறதா என களத்திற்கே சென்று ஆய்வு செய்வதை பார்க்க முடியும்.

வந்தது அமைச்சர் என தெரியாமல்

இந்த நிலையில்தான் நேற்று இரவு கோவை அருகே அரசு பேருந்து ஒன்று உரிய இடத்தில் நிறுத்தப்படாமல் இருந்ததை பார்த்த அமைச்சர் சிவசங்கர் டிரைவர் மற்றும் நடத்துநரிடம் இது பற்றி கேட்டுள்ளார். வந்து இருப்பது போக்குவரத்து அமைச்சர் என தெரியாமல் டிரைவரும் கண்டக்டரும் பொறுப்பற்ற முறையில் பதில் அளித்துள்ளனர். இது குறித்த விவரங்களை பார்க்கலாம்

.கோவையில் கொடீசியா வளாகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கலந்துகொண்டார். பின்னர் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு இரவு தனது காரில் அரியலூர் நோக்கி சென்றுள்ளார். செல்லும் வழியில் கரூர் - மாயனூர் இடையே ஒரு உணவகத்தில் காரை நிறுத்தி அமைச்சர் சிவசங்கர் டீ குடித்துள்ளார்.

அப்போது, அந்த உணவகத்தில் அரசு பேருந்து ஒன்றும் நிறுத்தப்பட்டிருந்தது. பயணிகள் பயோ பிரேக் மற்றும் உணவு அருந்துவதற்காக பேருந்து நிறுத்தப்பட்டுள்ளது. பேருந்தின் டிரைவர், கண்டக்டர் அங்கு சாப்பிட்டு விட்டு வெளியே வந்தனர். இதைப்பார்த்த அமைச்சர் சிவசங்கர் தனியாக சென்று அந்த டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் பேச்சு கொடுத்துள்ளார்

.உரிய இடத்தில் அரசு பேருந்தை நிறுத்தாமல் ஏன் இங்கு நிறுத்துகிறீர்கள். உங்களின் இந்த செயல்பாடுகள் குறித்து முதல்வரின் கவனத்திற்கு சென்றால் யார் பதில் சொல்வது என்று கேட்டு இருக்கிறார்.

சிவசங்கர் வழக்கமாக அணியும் வெள்ளை சட்டை, வேஷ்டி என இல்லாமல் பேண்ட், சர்ட்டுடன் பயணியை போல இருந்ததால் அவரை அடையாளம் கண்டு கொள்ளாத டிரைவரும் கண்டக்டரும், நீங்க ஏன் சார் இதெல்லாம் கேட்குறீங்க என்று கேட்டுள்ளனர். உங்க வேலையை பாருங்க என்ற தொனியில் கண்டக்டரும் டிரைவரும் பதிலளிக்க, உடனே அமைச்சர் சிவசங்கர், நான் யார் என்று உங்களுக்கு தெரியவில்லையா ? எனக்கேட்டுள்ளார்.