ஆகஸ்ட் 1 முதல் எல்லாமே மாறுது.. நீங்கள் கூகுள் பே, போன் பே மூலம் பணம் செலுத்துபவரா? இதை தெரிஞ்சுக்கோங்க

ஆகஸ்ட் 1 முதல் எல்லாமே மாறுது.. நீங்கள் கூகுள் பே, போன் பே மூலம் பணம் செலுத்துபவரா? இதை தெரிஞ்சுக்கோங்க
UPI) மூலம் பணம் பரிமாற்றங்கள் மிகவும் விரைவாகவும், பரவலாகவும் நடந்து வருகின்றன.

இந்தியாவில் யுபிஐ (upi) சேவையை அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக யுபிஐ (UPI) மூலம் பணம் பரிமாற்றங்கள் மிகவும் விரைவாகவும், பரவலாகவும் நடந்து வருகின்றன. அதுவும் பெட்டிக்கடைகள் முதல் பெரிய சூப்பர் மார்க்கெட்டுகள் வரை யுபிஐ பரிவர்த்தனைகளைப் பயன்படுத்துகின்றனர். அதேபோல் இந்த யுபிஐ சேவையில் அவ்வப்போது பாதுகாப்பு அம்சங்கள் கொண்டுவரப்படுகின்றன.

அதன்படி வரும் ஆகஸ்ட் 1 2025 முதல் சில புதிய விதிகள் நடைமுறைக்கு வருகிறது. குறிப்பாக போன் பே (PhonePe), கூகுள் பே (Google Pay), பேடிஎம் (Paytm) போன்றவை பண பரிமாற்றத்தில் சில முக்கிய கட்டுப்பாடுகளைப் பின்பற்ற வேண்டும். இது குறித்த தகவல்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

அதாவது இதில் முக்கியமானவை என்னவென்றால், உங்கள் வங்கி கணக்கு இருப்பு சரிபார்த்தல், பரிவர்த்தனை நிலையை (transaction status) உறுதி செய்தல், மொபைல் நம்பருடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்குகளின் பட்டியல், ஆட்டோமேட்டிக் பணம் செலுத்தும் (auto-pay mandate) சேவைகளுக்கு விதிக்கப்படும் வரம்புகள் என பல புதிய விதிமுறைகள் வருகின்றன.