மொத்தமா முடிச்சிவிட போறாங்க.. Wipro, Tech Mahindra நிறுவனங்களில் சம்பளம் குறைப்பு.. ஊழியர்கள் ஷாக்.

மொத்தமா முடிச்சிவிட போறாங்க.. Wipro, Tech Mahindra நிறுவனங்களில் சம்பளம் குறைப்பு.. ஊழியர்கள் ஷாக்.
2025ஆம் நிதியாண்டில் விப்ரோ மற்றும் டெக் மகேந்திரா நிறுவனங்களில் ஊழியர்களுக்கு வழங்கப்படும்

2025ஆம் நிதியாண்டில் விப்ரோ மற்றும் டெக் மகேந்திரா நிறுவனங்களில் ஊழியர்களுக்கு வழங்கப்படும் நடுப்பகுதி (Median) சம்பளம் அதாவது, சராசரி ஊழியர் ஊதியத்தில் சரிவை ஒரே நேரத்தில் பதிவு செய்துள்ளன. இது 8 ஆண்டுகளில் முதன்முறையாக நடந்துள்ளது

இதன் காரணமாக, இரு நிறுவனங்களும் தங்கள் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. நிபுணர்கள் கூறுகையில், நிறுவனங்கள் புதிய பணியாளர்களை அதிக அளவில் சேர்த்துள்ளன. அதேசமயம், பழைய ஊழியர்கள் விட்டு வெளியேறிய இடங்களை குறைந்த சம்பளத்தில் புதிய பணியாளர்களை நிரப்பி, லாபத்தை அதிகரிக்க முயற்சி செய்துள்ளதாக தெரிவித்துள்ளன

விப்ரோ மற்றும் டெக் மகேந்திரா நிறுவனங்கள் 2025ஆம் நிதியாண்டுக்கான ஆண்டு அறிக்கைகளில், நடுப்பகுதி சம்பளத்தில் 0.6% மற்றும் 6.52% குறைவாக இருந்ததாக தெரிவித்துள்ளன. விப்ரோவில் நடுப்பகுதி சம்பளம் ரூ.9.78 லட்சமாக இருந்தது. டெக் மகேந்திராவில் ஆண்களுக்கான சம்பளம் ரூ.18.3 லட்சமாகவும், பெண்களுக்கான சம்பளம் ரூ.15.4 லட்சமாகவும் இருந்தது.

நாட்டின் இரு மிகப்பெரிய ஐடி நிறுவனங்களான Tata Consultancy Services Ltd மற்றும் Infosys Ltd நிறுவனங்கள் இந்தாண்டில் ஊழியர்களுக்கு வழங்கும் நடுப்பகுதி சம்பளத்தை முறையே 6.3% மற்றும் 9.6% அதிகரித்துள்ளன. ஆனால், நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய மென்பொருள் சேவை வழங்குநர் HCL Technologies Ltd-ன் சம்பளம் குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை.