ஐடி வேலை வேண்டுமா? டிசிஎஸ் தரும் சூப்பர் சான்ஸ்.. சென்னை - பெங்களூர் - ஹைதராபாத்தில் பணி

சென்னை: முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ் சார்பில் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை, பெங்களூர், ஹைதராபாத் மற்றும் மும்பை உள்ளிட்ட இடங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்யலாம்.
டிசிஎஸ் எனும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது Teradata Developer பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்
இந்த பணியை பெற விரும்புவோர் பிஇ, பிடெக் பிரிவில் கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது அதற்கு தொடர்புடைய துறையில் படிப்பை முடித்திருக்க வேண்டும். அதேபோல் Teradata Developer பணியில் குறைந்தபட்சம் 6 ஆண்டு முதல் அதிகபட்சமாக 10 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
தற்போதைய அறிவிப்பில் பணிக்கான சம்பளம் குறித்த விவரம் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை, பெங்களூர், ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட நகரங்களில் நியமனம் செய்யப்பட உள்ளனர். அதிர்ஷ்டம் இருப்பின் சென்னையிலும் பணி செய்ய வாய்ப்பு கிடைக்கலாம்.
மேலும் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை. இதனால் விண்ணப்ப தேதி எப்போது வேண்டுமானாலும் முடிவுக்கு வரலாம். எனவே தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.