Ambikapathy திரைப்படம் எனக்குத் தெரியாமல் மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது - இயக்குநர் ஆனந்த் எல்.ராய்

Ambikapathy திரைப்படம் எனக்குத் தெரியாமல் மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது - இயக்குநர் ஆனந்த் எல்.ராய்
தனுஷ் இந்தி சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமான திரைப்படமாகும்

2013 ஆம் ஆண்டு ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் மற்றும் சோனம் கபூர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து அம்பிகாபதி திரைப்படம் வெளியானது.

 தனுஷ் இந்தி சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமான திரைப்படமாகும்.

2013 ஆம் ஆண்டு ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் மற்றும் சோனம் கபூர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து அம்பிகாபதி திரைப்படம் வெளியானது. இப்படமே தனுஷ் இந்தி சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமான திரைப்படமாகும்.

திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று ப்ளாக்பஸ்டர் ஹிட்டடித்தது. படத்தின் இசையை ஏ.ஆர் ரஹ்மான் மேற்கொண்டார். படத்தில் அமைந்த அனைத்து பாடல்களும் ஹிட்டானது.

இந்நிலையில் திரைப்படம் வெளியாகி 12 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில். படத்தை மீண்டும் நேற்று ரீரிலீஸ் செய்தனர். ஆனால் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியை மாற்றி ரீரிலீஸ் செய்துள்ளனர். அதில் தனுஷ் கடைசியாக உயிர் பெற்று வருவதுப் போல் காட்சிகள் அமைந்துள்ளது.

இது ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சி மற்றும் ஏமாற்றம் அளிப்பதாக அமைந்துள்ளது. இதுக்குறித்த ஆனந்த் எல் ராய் கூறியதாவது " அம்பிகாபதி படத்தை என்னிடம் கூறாமலே தயாரிப்பு நிறுவனம் ரீரிலீஸ் செய்துள்ளது . அந்த கிளைமாக்ஸ் காட்சியை மாற்றியதில் எனக்கு உடன்பாடில்லை. என்னுடைய ஒரு படைப்பை எடுத்து அவமரியாதை செய்துள்ளனர். இந்த செயலை ஒரு துரோகமாக கருதிகிறேன்" என கூறியுள்ளார்.