SBI PO Recruitment: டிகிரி படிச்சிருந்தா போதும்... SBI வங்கியில் 541 காலிப்பணியிடங்கள்... உடனே அப்ளை பண்ணுங்க..

SBI PO Recruitment: டிகிரி படிச்சிருந்தா போதும்... SBI வங்கியில் 541 காலிப்பணியிடங்கள்... உடனே அப்ளை பண்ணுங்க..
வங்கியில் வேலைவாய்ப்பு பெற வேண்டும் என்பது இளம் தலைமுறையினர் பலரது கனவாகும் அதுவும் நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியில் வேலைவாய்ப்பு என்றால் எப்படி இருக்கும்.

****AGNISIRAGU****

கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதாவது ஒரு இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். 30.09.2025 தேதிக்குள் படிப்பை முடித்து விடக்கூடிய இறுதி ஆண்டும் மாணவர்களும் இதற்கு விண்ணப்பிக்க முடியும்

பணி விபரம்: பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) புரொபேஷனரி ஆபிஸர் பதவியில் உள்ள 541 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது

.

SBI PO Recruitment: வங்கியில் வேலைவாய்ப்பு பெற வேண்டும் என்பது இளம் தலைமுறையினர் பலரது கனவாகும் அதுவும் நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியில் வேலைவாய்ப்பு என்றால் எப்படி இருக்கும். அப்படி ஒரு அறிவிப்பை தான் தற்போது எஸ்பிஐ வெளியிட்டுள்ளது.

சம்பள விபரம்: தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை சம்பளம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை:

இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்களிலிருந்து முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர். ஜூலை - ஆகஸ்ட் மாதத்தில் முதல்நிலைத் தேர்வு நடைபெறும். முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் முதன்மைத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் அக்டோபர் - நவம்பரில் நடைபெறும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

****AGNISIRAGU****