வங்கிகளில் கிளார்க் வேலை.. தேர்வர்கள் எதிர்பார்த்த மெகா அறிவிப்பு வந்தாச்சு.. 10 ஆயிரம் பணியிடங்கள்!

சென்னை: இந்தியன் வங்கி, கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளிட பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள கிளர்க் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாதம் ரூ.60 ஆயிரத்திற்கு மேல் சம்பளம் கிடைக்கும் இந்த பொன்னான வேலை வாய்ப்பை தவற விட்டுவிடாதீர்கள். தேர்வுக்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்..
நம் நாட்டில் அரசு பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்கள் ஐபிபிஎஸ் எனப்படும் வங்கிப் பணியாளர் தேர்வு ஆணையம் நிரப்பி வருகிறது. எஸ்பிஐ தவிர்த்து இதர முன்னணி வங்கிகள் அனைத்திலும் பணிக்கு சேர வங்கிப்பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தும் போட்டி தேர்வில் பங்கேற்று வெற்றி பெற்றால் போதுமானது...
பணியிடங்கள் விவரம்:
இதனால் வங்கியில் பணியாற்றுடன் கனவில் இருக்கும் தேர்வர்கள் ஐபிபிஎஸ் வெளியிடும் இந்த தேர்வு அறிவிப்பை பெரிதும் எதிர்பார்த்து காத்திருப்பார்கள். இந்த நிலையில்தான், தேர்வர்கள் எதிர்பார்த்த அந்த தேர்வு அறிவிப்பை ஐபிபிஎஸ் வெளியிட்டுள்ளது.இது குறித்த முழு விவரங்களை பார்க்கலாம்.
வாடிக்கையாளர் சேவை அசோசியேட்ஸ் (கிளர்க்) - 10,277 - மாநில வாரியாக பணியிட விவரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி பார்த்தால் தமிழ்நாட்டில் மட்டும் 897 பணியிடங்கள் உள்ளன. ஆந்திர மாநிலத்தில் 367, கர்நாடகா -1,170, கேரளா -330, புதுவை -19, தெலுங்கான 261 என மொத்தம் 36 மாநிலங்களிலும் சேர்த்து 10,277 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன..
கல்வி தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பை பொறுத்தவரை 21.08.2025 அன்று 20 வயது முதல் 28 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்..
அதாவது, 02.08.1997 க்கு முன்போ, 01.08.2005 க்கு பிறகே பிறந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க முடியாது. அரசு விதிகளை பின்பற்றி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். எஸ்சி/எஸ்டி பிரிவினர் என்றால் 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினர் என்றால் 3 ஆண்டுகளும் தளர்வுகள் அளிக்கப்படும்...
சம்பளம் எவ்வளவு?
ரூ.24,050 - 64,480 வரை சம்பளம் வழங்கப்படும். தேர்வு முறையை பொறுத்தவரை முதன்மை தேர்வு (கொள்குறி வகை), மெயின் தேர்வு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு மையங்களை பொறுத்தவரை சென்னை, கோயம்புத்தூர், தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, மதுரை, நாகர்கோவில்/ கன்னியாகுமரி, நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருப்பூர், வேலூர், விருதுநகர் ஆகிய நகரங்களில் அமைக்கப்படும்...
மெயின்ஸ் தேர்வுகள் சென்னை, கோவை, மதுரை, நாமக்கல், சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர் ஆகிய நகரங்களில் நடைபெறும்...
விண்ணப்பிப்பது எப்படி?
தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். பொதுப்பிரிவு, ஓபிசி உள்ளிட்ட பிரிவினருக்கு ரூ.850 தேர்வுக் கட்டணம் ஆகும். எஸ்சி/எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பிரிவினருக்கு ரூ.175 கட்டணம் ஆகும். ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கும் நாள்: 01.08.2025 ஆகும். விண்ணப்பிக்க கடைசி நாள் 21.08.2025 ஆகும். தேர்வு நடைபெறும் மாதம்: அக்டோபர் மாதம். தேர்வு முடிவு வெளியாகும் நாள் நவம்பர் ஆகும்...