D-Mart முழு அர்த்தம் என்ன? குறைந்த விலையில் விற்பனை செய்வதன் ரகசியம் இதுதான்..!

D-Mart முழு அர்த்தம் என்ன? குறைந்த விலையில் விற்பனை செய்வதன் ரகசியம் இதுதான்..!
குறைந்த விலையில் விற்பனை செய்வதன் ரகசியம் இதுதான்..!

மாநிலங்களை தவிர்த்து இந்தியாவின் மற்ற பல பகுதிகளிலும் நிறுவனங்களை ஏற்படுத்த டி மார்ட் நடவடிக்கை எடுத்து வருகிறது.அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் டி மார்ட் நிறுவனத்தில் பொருட்களை வாங்குவதற்கு சாமானியர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்

இதற்கு மற்ற நிறுவனங்களை விடவும் டி மார்ட்டில் குறைந்த விலைக்கு பொருட்கள் கிடைப்பது வாடிக்கையாளர்களின் ஆதரவுக்கு முக்கிய காரணம் ஆகும். அங்கு மட்டும் எப்படி குறைந்த விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன என்ற கேள்வி பலரது மத்தியில் எழலாம்.

அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். டி மார்ட் வணிக நிறுவனத்தை ராதாகிஷன் தமானி என்பவர் 2002 ஆம் ஆண்டு தொடங்கினார். 1980களில் அவர் பங்குச் சந்தையில் முதலீடு செய்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்ததாக கூறப்படுகிறது

அதனை தொலைநோக்கு பார்வையுடன் அதேநேரம் சமூக அக்கறையுடன் முதலீடு செய்ய விரும்பிய அவர் டி மார்ட் நிறுவனத்தை ஏற்படுத்தினார்.

முதலில் இந்த வணிக நிறுவனத்தின் பெயர் தமானி மார்ட் என்பதாகத்தான் இருந்தது. இதன் பின்னர் டி மார்ட் என மாற்றம் செய்யப்பட்டது.

ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தேவையான அத்தியாசிய பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்க வேண்டும் என்பதுதான் இந்த நிறுவனத்துடைய குறிக்கோளாக உள்ளது.

கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், டெல்லி உள்ளிட்ட 11 மாநிலங்களில் இந்த டி மார்ட் நிறுவனம் செயல்படுகிறது. சுமார் 375 க்கும் அதிகமான கடைகள் இந்த நிறுவனத்தின் கீழ் உள்ளன.

இவை சொந்த கட்டிடங்களில் அமைக்கப்படுவதால் வாடகை செலுத்த வேண்டிய அவசியம் டி மார்ட்டிற்கு இருக்காது. இதன் காரணமாகவும் பொருட்கள் குறைந்த விலையில் வழங்கப்படுகின்றன.

இந்தியாவின் நான்காவது பணக்காரராக ராதாகிஷன் தமாணி உள்ளார் அவரது சொத்து மதிப்பு 1 லட்சத்து 78 ஆயிரம் கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.

டி மார்ட்டில் வழங்கப்படும் பொருட்கள் தரம் வாய்ந்தது என்ற உத்தரவாதத்துடன் வழங்கப்படுகின்றன. அதே நேரம் சில பதப்படுத்தப்பட்ட பேக்கேஜ் உணவு பொருட்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு ஏற்படுத்தலாம் என்றும் எச்சரிக்கப்படுகிறது.

ஒட்டுமொத்தமாக டி மார்ட் என்பது வெறுமனே ஷாப்பிங் செல்வதற்கான இடமாக மட்டுமின்றி சாமானிய மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒரு பகுதியாக மாறி உள்ளது.

தொடர்ந்து வாடிக்கையாளர்கள் நல்ல ஆதரவை அளித்து வருவதால் குறைந்த விலையில் பொருட்கள் இங்கு வழங்கப்படுகின்றன.

மாநிலங்களை தவிர்த்து இந்தியாவின் மற்ற பல பகுதிகளிலும் நிறுவனங்களை ஏற்படுத்த டி மார்ட் நடவடிக்கை எடுத்து வருகிறது.