ரூ.2 கோடியை ரூ.100 கோடியாக மாற்றுவது எப்படி..? ரியல் எஸ்டேட் ஆலோசகரின் சூப்பர் ஐடியா..!!

ஹரியானா மாநிலம் குருக்ராமில் பிளாட் வாங்குவதால் மட்டும் செல்வந்தர் ஆகிவிட முடியாது. வாடிக்கையாளர் மாதிரி அல்லாமல், கட்டிட மேஸ்திரி போல் யோசிக்க வேண்டும் என்று ரியல் எஸ்டேட் ஆலோசகர் ஐஸ்வர்யா ஸ்ரீ கபூர் கூறியுள்ளார். சமீபத்தில் அவர் வெளியிட்ட LinkedIn பதிவில், ரூ.2 கோடி முதலீட்டை ரூ.100 கோடியாக மாற்றிய ரகசியம் குறித்து பகிர்ந்துள்ளார்.
அவர் கூறுகையில், "நீங்கள் ஒரு புது அப்பார்ட்மென்ட் வாங்கும்போது, வாடிக்கையாளர் போல் யோசிக்கக் கூடாது. ஒரு கட்டட மேஸ்திரி போல் யோசிக்க வேண்டும். விளம்பரங்களை நம்பி அட்வான்ஸ் கொடுத்தால் வளர்ச்சி வராது. அரசாங்கத்தின் நிலம் தொடர்பான சட்டங்கள், சிட்டி மாஸ்டர் பிளான்கள், நிகர நிதிச் சுழற்சி போன்றவற்றை புரிந்து, சரியான நேரத்தில் முதலீடு செய்தால் தான் மிகப்பெரிய லாபம் கிடைக்கும். முதலீடு செய்ய இடம் மட்டும் போதாது. நேரமும் மிக அவசியம்" என்பதை அவர் வலியுறுத்தியுள்ளார். பொருளாதார சுழற்சி எப்போது மேலே போகிறது என்பதை கணிக்க முடிந்தால் அப்போது ரூ.2 கோடி, ரூ.100 கோடியாக கூட மாறும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
குருக்ராம் ஒரு நகரம் இல்ல. இது ஒரு flywheel. ஒரு பணப்புழக்க சக்கரம் போல வேலை செய்கிறது" என்று ரியல் எஸ்டேட் ஆலோசகர் ஐஸ்வர்யா ஸ்ரீ கபூர் கூறியுள்ளார். சொத்தை நீண்ட காலம் வைத்திருந்தால்தான் லாபம் கிடைக்கும் என்ற பழைய எண்ணம் தவறு. உண்மையான லாபம் வருவது, முதலீட்டு பணத்தை சுழற்றுவதில் இருந்து தான் என்பதை அவர் விளக்கியுள்ளார்
அதாவது, அரசு கொள்கை மாற்றங்களுக்கு முன்னரே நிலத்தில் நுழைவது, அனுமதிகள் வருவதற்கு முன்பு சொத்தை வேகமாக விற்பது, இணை முயற்சி முறையில் பங்கீடு செய்வது, வாடிக்கையாளர்களுக்காக மொத்தமாக விற்கும் நேரத்தை கணிக்க வேண்டும், லாபத்தை ஒழுங்குபடுத்தி திரட்டும் கட்டம் ஆகியவை முக்கியம். ஒரு திட்டம் பற்றி விளம்பரங்கள் (hoardings) தெரியும் நேரம் வந்துவிட்டால், அந்த இடத்தில் வரும் IRR - Internal Rate of Return குறைந்து விட்டது என்பதற்கான அறிகுறியாகும். அதாவது, உங்கள் முதலீடு விற்பனைக்கு வரும் பின் செய்யப்படும் என்றால், வளர்ச்சியின் பெரிய பகுதி ஏற்கனவே போய்விட்டது என்பதையும் அவர் தெரிவித்துள்ளா
குருக்ராமில் உள்ள நிலத்தின் மதிப்பு சாதாரணமாக உயரும் என்று நினைக்காதீர்கள். இது ஒரு திட்டமிட்ட முறையைப் பின்பற்றுவதாக ஐஸ்வர்யா ஸ்ரீ கபூர் கூறியுள்ளார். மூலதன வசதியின் வளர்ச்சி, அரசு அனுமதிகள் மற்றும் லைசன்ஸ், முதலீட்டு பணத்தின் சுழற்சி, வாடிக்கையாளர் தேவை, சமநிலை மற்றும் மந்த நிலை ஆகியவற்றை நீங்கள் ஆரம்பக் கட்டத்திலேயே தவறவிட்டால், பின்னாளில் பெற லாபத்தை பெற முடியாது என்று அவர் எச்சரிக்கிறார். மேலும், நீங்கள் 10 திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும் என்கிற அவசியம் இல்லை. வளர்ச்சியை நோக்கி செல்லும் 5 முக்கிய தருணங்களை புரிந்து கொண்டாலே போதுமானது என்றும் அவர் கூறியுள்ளார்