டிகிரி மட்டும் போதும்.. Amazon நிறுவனத்தில் அசத்தலான வேலைவாய்ப்பு.. சென்னையில் பணி

டிகிரி மட்டும் போதும்.. Amazon நிறுவனத்தில் அசத்தலான வேலைவாய்ப்பு.. சென்னையில் பணி
பிரபல அமேசான் நிறுவனத்தின் சென்னை அலுவலகத்தில் பணியாற்ற தேவையான ஆட்கள் தேர்வு

சென்னை: பிரபல அமேசான் நிறுவனத்தின் சென்னை அலுவலகத்தில் பணியாற்ற தேவையான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்யலாம்.

அமேசான் நிறுவனம் பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. இந்த நிறுவனம் சார்பில் ஆன்லைன் வர்த்தகம், க்ளைட் கம்ப்யூட்டிங், ஆன்லைன் விளம்பரம், டிஜிட்டல் ஸ்ட்ரிம்மிங், ஏஐ உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அமேசான் செயல்பட்டு வருகிறது..

அமேசான் நிறுவனம் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் சென்னையில் செயல்பட்டு வரும் அமேசான் நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு இப்போது வெளியாகி உள்ளது..

தற்போதைய அறிவிப்பின்படி அமேசான் நிறுவனத்தில் டேட்டா அசோசியேட் I (ML Data Associate I)பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். ஆங்கிலத்தில் பிழையின்றி பேசவும், எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். மைக்ரோசாப்ட் ஆபீஸ் தொடர்பான அப்ளிகேஷன் பற்றிய அறிவு கொண்டிருக்க வேண்டும்..

மேலும், எந்த வகையான ஷிப்ட்டுகளிலும் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். அதேபோல் சென்னை உள்பட பிற இடங்களில் பணியாற்றவும், இரவு பணியில் பணியாற்றவும், வார இறுதி நாட்களில் பணியாற்றவும் தயாராக இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்..

இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களின் பணி என்பது ப்ராடெக்ட் டெவலப்மெண்ட் தொடர்பாக Ground truth Data கலெக்ட் செய்தல், ரிப்போர்ட் அடிப்படையில் சரியாக ரிசல்ட் கொண்டு வருதல், Data Capture-க்கான சாப்ட்வேர் டூல்ஸ் பயன்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் உள்ள அமேசான் நிறுவனத்தில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. தகுதி மற்றும் திறமையை பொறுத்து சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்படும்...

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் அமேசான் நிறுவனத்தின் இணையதளம் சென்று விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி குறிப்பிடப்படவில்லை. இதனால் முன்கூட்டியே விண்ணப்பம் செய்வது நல்லது. ஏனென்றால் எப்போது வேண்டுமானாலும் இந்த பணிக்கான விண்ணப்ப பதிவு முடிவுக்கு வரலாம் என்பதால் விரைந்து விண்ணப்பம் செய்வது நல்லது...