7 லட்சம் சம்பளம்.. அனுபவம் வேண்டாம்!

சேலம்: முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக கிரீன்வே ஹெல்த்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு முன்அனுபவம் தேவையில்லை. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் வரும் ஜூலை 24ம் தேதிக்குள் முன்பதிவு செய்து ஜூலை 25ம் தேதி ஆன்லைனில்நடக்கும் இண்டர்வியூவில் பங்கேற்கலாம்..
கிரீன்வே ஹெல்த் என்பது ஐடி கன்சல்டன்ட் மற்றும் ஐடி சர்வீசஸ் நிறுவனமாகும். இந்த நிறுவனம் சார்பில் தற்போது பல்வேறு பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்...
அதன்படி டிரெய்னி/அசோசியேட் சாப்ட்வேர் இன்ஜினியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.இந்த பணியை விரும்புவோர் 2025ம் ஆண்டில் பிஇ, பிடெக் பிரிவில் கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, சிஎஸ்பிஎஸ், ஏஐ மற்றும் டிஎஸ், சைபர் செக்யூரிட்டி அல்லது அதனுடன் தொடர்புடைய பிரிவில் படிப்பை முடித்திருக்க வேண்டும்..
அதேபோல் 10, பிளஸ் 2வில் 60 சதவீத மதிப்பெண்களுடன், கல்லூரி படிப்பில் 7 சதவீத சிஜிபிஏ-வும் இருக்க வேண்டும். இதற்கு குறைய கூடாது. இதுதவிர விண்ணப்பம் செய்வோருக்கு சில முக்கிய தகுதிகள் வேண்டும். அதன்படி புரோகிராமிங் லேங்குவேஜ்களான பைத்தான், ஜாவா ஸ்கிரிட், சி# அல்லது ஜாவா தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் வெப் டெக்னாலஜிகளான எச்டிஎம்எல், சிஎஸ்எஸ், ஜாவா ஸ்கிரிப்ட் பற்றிய புரிதல் இருக்க வேண்டும்..
அதோடு டேட்டா ஸ்ட்ரக்சர்ஸ், அல்காரிதம், ஆப்ஜெக்ட் ஓரியன்டட் புரோகிராமிங் உள்ளிட்டவை பற்றிய அறிவை பெற்றிருக்க வேண்டும். மேலும் டேட்டா பேசஸ் (எஸ்க்யூஎல் அல்லது NoSQL) மற்றும் வெர்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம் (Git), பிரேம்வொர்க்ஸ்களான React, Node.Js அல்லது .NET உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும். ஏடபிள்யூஎஸ் மற்றும் AZure அல்லது ஜிசிபி உள்ளிட்டவை தெரிந்திருக்க வேண்டும். இதற்கான இண்டர்வியூ வரும் 25ம் தேதி ஆன்லைனில் நடைபெற உள்ளது..
அன்றைய தினம் ஆன்லைன் கோடிங் டெஸ்ட் நடக்கும். அதன்பிறகு ஜூலை 6ம் தேதி ஆன்லைன் டெக்னிக்கல் ரவுண்ட் அல்லது டெக்னிக்கல் குரூப் டிஸ்கஷன் நடக்கும். பிறகு Aptitude டெஸ்ட், Talent Round உள்ளிட்ட சேலத்தில் உள்ள KIOT எனப்படும் Knowedge Institute of Technology (Autonomous)அல்லது பெங்களூரில் நடைபெறும்...
இதில் தேர்வாகும் நபர்கள் முதல் 3 மாதங்கள் இன்டர்ன்ஷிப் வழங்கப்படும்.அப்போது ரூ.40 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரை Stipend வழங்கப்படும். இந்த இன்டர்ன்ஷிப்பை வெற்றிகரமாக முடிப்போருக்கு பணி வழங்கப்படும். அப்போது ஆண்டுக்கு ரூ.6 லட்சம் முதல் ரூ.7 ல்டசம் வரை சம்பளம் வழங்கப்படும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் வரும் 24ம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள லிங்க் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டம். இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு இண்டர்வியூவிற்கு அழைக்கப்படுவார்கள்.