கிராம நத்தம் புறம்போக்கு நிலம்.. இ-பட்டாவில் மாற்றம்? இனி யாரும் வாலாட்ட முடியாது.. சபாஷ் தமிழக அரசு

கிராம நத்தம் புறம்போக்கு நிலம்.. இ-பட்டாவில் மாற்றம்? இனி யாரும் வாலாட்ட முடியாது.. சபாஷ் தமிழக அரசு
வாயிலாக விண்ணப்பிக்கலாம். நிலம் அமைந்துள்ள மாவட்டம், வட்டம், கிராமம் போன்ற விவரங்களை குறிப்பிட்டால், இ- பட்டா

சென்னை: இ-பட்டா பெறுவதற்கு eservices.tn.gov.in வாயிலாக விண்ணப்பிக்கலாம். நிலம் அமைந்துள்ள மாவட்டம், வட்டம், கிராமம் போன்ற விவரங்களை குறிப்பிட்டால், இ- பட்டாவை டவுன்லோடும் செய்து கொள்ளலாம். அதேபோல, நில உரிமையாளர் மாறும்போது பட்டாவையும் மாற்றிக்கொள்ளலாம். இதற்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். அல்லது தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். இவ்வளவு வசதிகள் இ-பட்டாவில் இருந்தாலும், கூடுதலாக ஒரு மாற்றத்தை அரசு செய்ய போவதாக தெரிகிறது. இதுகுறித்த தகவல்தான் தற்போது வெளியாகியிருக்கிறது

தமிழக அரசு பொதுமக்களின் வசதிக்காக பத்திரப்பதிவின்போதே உடனடியாக பட்டா பெயர் மாற்றம் செய்து வழங்கும் ஒரு நிமிட பட்டா திட்டத்தை அதாவது தானியங்கி பட்டா திட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளது..

காரணம், நகர் பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் மற்றும் கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களை பத்திரப்பதிவின் போதே பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. என்றாலும், கிராமங்களில் நத்தம் என வகைப்படுத்தப்பட்ட குடியிருப்புகளுக்கு உடனடியாக பட்டா வழங்கப்படவில்லை... எனவேதான், ஒரு நிமிட பட்டா திட்டத்தை, தமிழக அரசு விரிவாக்கம் செய்துள்ளது..

சர்வரில் மாற்றம்

இதற்காக பத்திரப்பதிவுத்துறை சர்வரில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன. அதன் மூலம் இனி, கிராமங்களில் உள்ள வீடுகளை பத்திரப்பதிவு செய்யும் போதே உடனடியாக பட்டா பெயர் மாற்றம் செய்யப்படும் பணி தொடங்கிவிட்டது. உட்பிரிவு செய்ய தேவையில்லாத நிலங்களை பத்திரப்பதிவு செய்யும் போதே உடனடியாக பட்டா மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.

மேலும், அரசின் வருவாய்த்துறை, கிராமப்புறங்களில் உள்ள நத்தம் குடியிருப்பு பட்டா விவரங்களை பொதுமக்கள் எளிதாக பார்க்கும் வகையில் https://eservices.tn.gov.in/eservicesnew/ home.html என்ற வெப்சைட்டை மேம்படுத்தி உள்ளது... இந்த வெப்சைட், பத்திரப்பதிவு துறை சர்வரில் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம்,தாலுகாக்களில் நத்தம் குடியிருப்பு பகுதிகளின் பட்டா விவரங்களை பார்வையிடலாம்

-பட்டா வழங்குவது எப்படி

இப்படிப்பட்ட சூழலில், இ-பட்டா குறித்து ஒரு முக்கிய தகவல் வெளியாகியிருக்கிறது..

ஒரு நிலத்தின் உரிமை யாருக்கு உள்ளது என்பதைக் காட்டும் ஆவணமான இ-பட்டா, மின்னணு முறையில் வழங்கப்பட்டு வருகின்றன.. இந்த இ-பட்டாக்களுடன், ஆதார் நம்பரையும் போட்டோவையும் இணைத்து, ஆன்லைனில் வழங்கும் நடைமுறை, விரைவில் அமலுக்கு வரப்போவதாக கூறப்படுகின்றன.

ஏனெனில், கடந்த 2021 லிருந்தே இப்போதுவரை HSD பட்டா, இ-பட்டா, அரசாணை 97ன் படியான நத்தம் பட்டா, இவை மூன்றும் கூகுள் ஷீட்டில் தயாராகிறது.. அப்போது பட்டாதாரரின் ஆதார் எண், மொபைல் எண், போட்டோ ஆகியவை சரிபார்த்து பதிவு செய்யப்படுகிறது.

பட்டா பெறுபவரிடமிருந்து ஆதார் கார்டு, ரேஷன்கார்டு, மின்இணைப்பு எண் போன்றவற்றை பதிவு செய்து வருவாய்த்துறை சர்வரிலும் அப்லோடு செய்யப்படுகிறது.. இதுதான் இ-பட்டாவாக கிடைக்கப் பெறுகிறது..

ஆனால், இவைகளில் போட்டோ மற்றும் ஆதார் எண் போன்றவை இடம் பெறுவதில்லை. இவைகளையும் இடம்பெற செய்துவிட்டால், ஆள்மாறாட்டம் உள்ளிட்ட நிலமோசடிகளை எளிதாக தடுக்கலாம் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள். எனவே, இ-பட்டாக்களுடன், ஆதார் நம்பரையும் போட்டோவையும் இணைப்பதற்கான பணிகள் நடந்து வருகிறதாம்

.