30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது: வீட்டில் சிக்கியது 1.60 கோடி ரூபாய்!

30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது: வீட்டில் சிக்கியது 1.60 கோடி ரூபாய்!
டில்லியில் ரூ.30,000 லஞ்சம் வாங்கிய பொதுப்பணித்துறை நிர்வாகப் பொறியாளரை சிபிஐ

புதுடில்லி: டில்லியில் ரூ.30,000 லஞ்சம் வாங்கிய பொதுப்பணித்துறை நிர்வாகப் பொறியாளரை சிபிஐ கைது செய்தது. இந்த சோதனையில் ரூ.1.60 கோடி ரொக்கம் பணம் மீட்கப்பட்டது.

டில்லியில் உள்ள ரூஸ் அவென்யூ மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள நீதித்துறை சிவில் பிரிவு-2 பொதுப்பணித்துறை நிர்வாக பொறியாளரை ஒப்பந்ததாரர் ஒருவர் அணுகினார்.

நிலுவையில் உள்ள பில் தொகைகளை விடுவிக்க வேண்டும் எனில் லஞ்சம் கொடுக்க வேண்டும், அதாவது மொத்த பில் தொகையில் 3 சதவீதம் கமிஷன் கொடுக்க வேண்டும் என்று அதிகாரி கூறியுள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத ஒப்பந்ததாரர் சிபிஐ போலீசிடம் புகார் தெரிவித்தார்.

போலீசார் யோசனைப்படி பொறியாளரிடம் ரூ.30,000 லஞ்சப் பணத்தை கொடுத்தார்.

அப்போது அங்கு மறைந்திருந்த சிபிஐ போலீசார், பொறியாளரை கையும் களவுமாக பிடித்தனர். லஞ்ச பணம் ரூ.30 ஆயிரத்தை பறிமுதல் செய்து பொறியாளரை கைது செய்தனர்.

இது தொடர்பாக அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் டில்லி மற்றும் ஜெய்ப்பூரில் நடத்தப்பட்ட சோதனைகளில் ரூ.1.60 கோடி பணம், சொத்து ஆவணங்கள் மீட்கப்பட்டன.

மேலும் விசாரணை நடந்து வருகிறது.