ஆபரேஷன் அகால்: ஜம்மு காஷ்மீரில் ராணுவத்துடன் மோதல் - 2 பயங்கரவாதிகள் உயிரிழப்பு

ஆபரேஷன் அகால் என்ற பெயரில் ராணுவம், காட்டில் சோதனை நடத்தினர்.
மறைந்திருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
ஜம்மு காஷ்மீரில் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த கடுமையான மோதலில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் .
குல்காம் மாவட்டத்தின் அகால் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் இருப்பது குறித்த குறிப்பிட்ட தகவலைப் பெற்றதை அடுத்து பாதுகாப்புப் படையினர் வெள்ளிக்கிழமை தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கினர்.
ஆபரேஷன் அகால் என்ற பெயரில் ராணுவம், காட்டில் சோதனை நடத்திக் கொண்டிருந்தபோது, அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இன்று (சனிக்கிழமை) காலை ஆபரேஷன் அகால் தொடர்கிறது என்று ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. உடனே ராணுவ வீரர்கள் பதிலடி கொடுத்தனர்.
இரு தரப்பினருக்கும் இடையே இரவு முழுவதும் துப்பாக்கிச் சண்டை தொடர்ந்தது.
இதுதொடர்பாக ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், "ஆபரேஷன் அகால் தொடர்கிறது. இதுவரை படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த நடவடிக்கை இன்னும் முடிவடையவில்லை" என்று தெரிவித்துள்ளது.
வனப்பகுதியில் பயங்கரவாதிகள் இன்னும் இருக்க வாய்ப்புள்ளதால், படைகள் தேடுதலை தீவிரப்படுத்தியுள்ளன