பயணிகளின் கோரிக்கை ஏற்பு: சேலம் டவுனில் இனி 3 நிமிடங்கள் ரெயில் நின்று செல்லும்- தெற்கு ரெயில்வே

பயணிகளின் கோரிக்கை ஏற்பு: சேலம் டவுனில் இனி 3 நிமிடங்கள் ரெயில் நின்று செல்லும்- தெற்கு ரெயில்வே
சென்னை எழும்பூரில் இருந்து சேலத்திற்கு தினமும் இரவு 11.55 மணிக்கு சேலம் அதிவிரைவு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.;

சென்னை எழும்பூரில் இருந்து சேலத்திற்கு தினமும் இரவு 11.55 மணிக்கு சேலம் அதிவிரைவு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் மறுநாள் காலை 6.15 மணிக்கு சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தை சென்றடைகிறது. முன்னதாக, இந்த ரெயில் சேலம் டவுன் ரெயில் நிலையத்தில் 1 நிமிடம் நின்று செல்லும். ஆனால், இந்த ரெயில் நிலையத்தில் பயணிகள் அதிகம் இறங்குவதால், ரெயில் நிற்கும் நேரத்தை 3 நிமிடமாக அதிகரிக்க வேண்டும் என்று பயணிகளிடம் இருந்து கோரிக்கை எழுந்தது.

அதன் அடிப்படையில் தெற்கு ரெயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

சென்னை எழும்பூர் - சேலம் இடையே இயக்கப்படும் அதிவிரைவு ரெயில் (வண்டி எண். 22153/22154) வரும் 4-ந் தேதி முதல் சேலம் டவுன் ரெயில் நிலையத்தில் ஒரு நிமிடத்திற்கு பதிலாக 3 நிமிடம் நின்று செல்லும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது