வெற்றிமாறன் இயக்கத்தில் இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்கும் சிம்பு

வெற்றிமாறன் இயக்கத்தில் இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்கும் சிம்பு
சிம்பு அடுத்ததாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கேங்ஸ்டர் கதையில் நடிக்க உள்ளார்.;

சென்னை,

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிம்பு. இவரது நடிப்பில் கடந்த மே 5-ந் தேதி தக் லைப் படம் வெளியானது. இந்த படத்தில் சிம்புவின் கதாபாத்திரத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதனை தொடர்ந்து, சிம்பு அடுத்ததாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். வடசென்னையை மையப்படுத்தி கேங்ஸ்டர் கதையாக இப்படம் உருவாக உள்ளது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உருவாகியுள்ளது.

இந்த படத்தில், சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குனர் நெல்சன் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சென்னை எண்ணூரில் தொடங்கியது. இதுதொடர்பான புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவி வைரலானது.

இந்த நிலையில், சிம்பு வெற்றிமாறன் கூட்டணியில் உருவாக உள்ள படத்திலிருந்து புதிய தகவல் கிடைத்துள்ளது. அதாவது, எஸ்டிஆர் 49-வது படத்தில் சிம்பு இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளாராம். இது குறித்த அறிவிப்பு வீடியோ அடுத்த வாரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.