வளைவு இல்லாமல் 90 டிகிரியில் பாலம் கட்டிய விவகாரம்; 7 என்ஜினீயர்கள் சஸ்பெண்ட்

வளைவு இல்லாமல் 90 டிகிரியில் பாலம் கட்டிய விவகாரம்; 7 என்ஜினீயர்கள் சஸ்பெண்ட்
பாலத்தை கட்டிய கட்டுமான ஒப்பந்த நிறுவனம் கறுப்புபட்டியலுக்கு மாற்றப்பட்டு உள்ளது.;

மத்திய பிரதேச மாநிலம் போபால் நகரின் ஆயிஷ்பாஹ் பகுதியில் புதிதாக ஒரு ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. ரூ.18 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த பாலம், புதிய போபால் நகரின் மகமாய் கா பாஹ் மற்றும் புஷ்பா நகர் பகுதிகளை இணைக்கும் விதமாக உருவாக்கப்பட்டது. இந்த பால கட்டுமானம் இப்போது விமர்சனம் மற்றும் சர்ச்சைக்கு

உள்ளாகி இருக்கிறது.

பொதுவாக பாலங்கள் சீரான ஏற்ற இறக்கத்துடன், வாகனங்கள் திரும்ப உகந்த வளைவுடன் அமைக்கப்படும். ஆனால் ஆயிஷ்பாஹ் பாலம், வளைவு இல்லாமல் 90 டிகிரி திருப்பத்துடன் அமைக்கப்பட்டு உள்ளதாக அந்த பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இது குறித்த புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு சமூக வலைத்தளங்களில் விமர்சித்தனர்.