ஆதார் விவரங்கள் திருத்துவதில் சிக்கலா? மதுரையில் உள்ள ஆதார் நேரடி சேவை மையம் பற்றி தெரியுமா?

ஆதார் விவரங்கள் திருத்துவதில் சிக்கலா? மதுரையில் உள்ள ஆதார் நேரடி சேவை மையம் பற்றி தெரியுமா?
மதுரையில் உள்ள ஆதார் நேரடி சேவை மையம் பற்றி தெரியுமா?

சென்னை: தமிழகத்தில் சென்னை மற்றும் மதுரையில் ஆதார் நேரடி சேவை மையங்கள் உள்ளன. ஆதார் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்ற மையங்களில் ஒரு சில நேரங்களில் தொழில்நுட்ப கோளாறு அல்லது சான்றிதழ்கள் பதிவேற்றம் ஆகியவற்றால் தவறு ஏற்பட்டு ஆதார் நிராகரிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. ஆனால் நேரடி சேவை மையங்களில் பெரும்பாலான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதில்லை.

ஆதார் என்பது தற்போது மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. வங்கி கணக்கு துவங்குவது, அரசின் நலத்திட்டங்கள் பெறுவதற்கு என அனைத்திற்கும் 11 இலக்கங்கள் கொண்ட ஆதார் அடையாள எண்ணே கேட்கப்படுகிறது. ஆதார் விவரங்களில் ஏதேனும் திருத்தம் இருந்தால் அதை மேற்கொள்வதற்குள் படாத பாடு பட வேண்டியுள்ளது.

ஆதாரில் திருத்தங்கள்

சில திருத்தங்களை பயனளர்கள் எவ்வளவு முயன்றாலும் செய்ய முடியாத அளவுக்கு நிராகரிக்கப்படுகிறது. ஆதார் விவரங்களில் ஏதேனும் திருத்தம் மேற்கோள்ள வேண்டியிருந்தால் ஆதார் சேவை மையங்களுக்கு மக்கள் படையெடுப்பதை பார்க்க முடிகிறது. தனிநபர் அடையாள எண் ஆணையத்தின் கீழ் இந்த சேவை மையங்கள் செயல்படுகின்றன. இவை 2 மையங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன

அதாவது, ஆதார் ஆணையமே நேரடியாக நடத்தும் சேவை மையங்கள் மற்றும் அதன் அங்கீகாரம் பெற்ற சேவை மையங்கள் என பிரிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் வங்கிகள், தபால் நிலையங்கள் மற்றும் அந்தந்த மாநில அரசுகள் சார்பில் 66 ஆயிரம் ஆதார் சேவை மையங்கள் உள்ளன. இதில், 88 நேரடி ஆதார் சேவை மையங்கள் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் 72 நகரங்களில் இயங்கி வருகிறது.

நேரடி சேவை மையங்கள்

தமிழகத்தில் சென்னை மற்றும் மதுரையில் இந்த நேரடி சேவை மையங்கள் உள்ளன. ஆதார் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்ற மையங்களில் ஒரு சில நேரங்களில் தொழில்நுட்ப கோளாறு அல்லது சான்றிதழ்கள் பதிவேற்றம் ஆகியவற்றால் தவறு ஏற்பட்டு ஆதார் நிராகரிக்கப்படும் நிலை உள்ளது. ஆனால் நேரடி சேவை மையங்களில் பெரும்பாலான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதில்லை

இந்த நேரடி சேவை மையங்கள் வாரத்தின் 7 நாட்களும் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை செயல்படும். இங்கு ஆதார் தொடர்பான அனைத்து வித சேவைகளையும் பெற முடியும். ஆதாரில் பெயர் மாற்றம், பிறந்த தேதி, கைரேகை புதுப்பித்தல் அடையாள சான்று மற்றும் முகவரி சான்ற ஆவணங்களை பதிவேற்றம் செய்தல் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படுகின்றன.

எத்தனை முறை முன்பதிவு செய்ய முடியும்

இந்திய குடிமக்கள் எந்த மாநிலத்தில் உள்ள ஆதார் நேரடி சேவை மையத்திலும் இந்த சேவைகளை பெற முடியும். நேரடி சேவை மையங்களில் திருத்தம் மேற்கோள்ள நினைப்பவர்கள் ஆன்லைனில் https  என்ற முகவரியில் முன்பதிவு செய்ய வேண்டும். தனி நபர் மட்டுமின்றி குடும்ப உறுப்பினர்களுக்காகவும் ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியும். முன்பதிவுக்கு எந்த கட்டணமும் கிடையாது.

இதற்காக ஆதாரில் பதிவு செய்த செல்போன் எண் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஒரு மாதத்திற்கு 4 முன்பதிவு செய்ய முடியும். அந்தந்த நகரத்தை பொறுத்து, நாள் ஒன்றுக்கு 250 முதல் 1,000 விண்ணப்பதாரர்கள் வரை முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. ஆன்லைன் முன்பதிவு பெற்ற நாள் மற்றும் நேரத்தில் சேவை மையத்துக்கு சென்று முதலில் டோக்கன் பெற வேண்டும். இந்த டோக்கன்கள் மாலை 5.30 மணி வரை வழங்கப்படும்.

கட்டணம் எவ்வளவு?

ஆதார் பதிவு செய்ய கட்டணம் எதுவும் கிடையாது. 5 மற்றும் 15 வயதுடையவர்கள் புதுப்பித்தலுக்கு கட்டணம் கிடையாது. பயோ மெட்ரிக் புதுப்பித்தலுக்கு ரூ.10, முகவரி மாற்றத்துக்கு ரூ.50, ஆதார் பதிவிறக்கம் செய்ய அல்லது வண்ண பிரதி பெற ரூ.30 என்ற அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படும்

.நேரடி சேவை மையங்களில் மைய மேலாளர் மற்றும் இயக்க மேலாளர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஆதார் எடுப்பதில் சிரமங்கள் இருந்தால் அல்லது சந்தேகங்கள் இருந்தால் 1947 என்ற எண்ணிலும், help@uidai.gov.in என்ற இ.மெயில் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.