நீளும் சாதிய அருவருப்பின் அட்டூழியம்” - நெல்லை ஐடி ஊழியர் கொலைக்கு மாரி செல்வராஜ் கண்டனம்

நீளும் சாதிய அருவருப்பின் அட்டூழியம்” - நெல்லை ஐடி ஊழியர் கொலைக்கு மாரி செல்வராஜ் கண்டனம்
நீளும் சாதிய அருவருப்பின் அட்டூழியம்” - நெல்லை ஐடி ஊழியர் கொலைக்கு மாரி செல்வராஜ் கண்டனம்

சென்னை: நெல்லை ஐடி ஊழியர் கவின் கொலை செய்யப்பட்டதற்கு இயக்குநர் மாரி செல்வராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “நீளும் சாதிய அருவருப்பின் அட்டூழியம். சாதிய பெருமைவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை அரசு இன்னும் துரிதமானதாகவும் கடுமையானதாகவும் நிச்சயம் செயல்படுத்தியே ஆகவேண்டும்” என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோரையும் இணைத்துள்ளார்.

நடந்தது என்ன? - தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் கவின் (27). இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்த கவின், உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த தனது உறவினரை அழைத்துக் கொண்டு பாளையங்கோட்டை கேடிசி நகர் அஷ்டலட்சுமி நகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வந்தார்.

உறவினருடன் மருத்துவமனை முன்பு நின்று கொண்டிருந்தபோது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் கவினை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர். இதில் பலத்த காயமடைந்த கவின், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பாளையங்கோட்டை போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த வழக்கில் கவினை கொலை செய்ததை சுர்ஜித் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், சம்பவப் பகுதிகளில் இருந்த சிசிடிவி கேமராக்களிலும் கவினை சுர்ஜித் கொலை செய்யும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இதனையடுத்து பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சுர்ஜித் மீது கொலை, சாதிய வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.