ராசியாகிவிட்டார்களா ராஜாவும் கலைவாணனும்? - திருவாரூர் திமுக !

ராசியாகிவிட்டார்களா ராஜாவும் கலைவாணனும்? - திருவாரூர் திமுக !
ராசியாகிவிட்டார்களா ராஜாவும் கலைவாணனும்? - திருவாரூர் திமுக பாலிடிக்ஸ்!

திருவாரூர் மாவட்ட திமுக-வில் அசைக்கமுடியாத சக்தியாக இருக்கும் பூண்டி கலைவாணன் எம்எல்ஏ, 18 ஆண்டுகளாக மாவட்டச் செயலாளராகவும் இருக்கிறார். திமுக தலைவர் கருணாநிதி திருவாரூரில் இரண்டு முறை வென்றபோதும் தொகுதியில் அவருக்கான ஆக்டிங் எம்எல்ஏ-வாக இருந்த கலைவாணன், இந்த முறை அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்தார். ஆனால், இதே மாவட்டத்தைச் சேர்ந்த டி.ஆர்.பி.ராஜாவும் அதற்கான போட்டியில் இருந்ததால் இருவருக்கும் அமைச்சரவையில் இடமளிக்காமல் சாதுர்யமாக தவிர்த்துக் கொண்டது தலைமை.

இத​னால், திரு​வாரூர் மாவட்​டத்​தில் கலை​வாணனும் ராஜா​வும் ஆளுக்​கொரு பக்​கம் பலம் திரட்​டி​னார்​கள். மன்​னார்​குடி​யில் தொடர்ச்​சி​யாக மூன்​றாவது முறை​யாக வென்​றிருக்​கும் டி.ஆர்​.பி.​ராஜா, தனது தொகு​திக்​குள் பூண்டி கலை​வாணன் அரசி​யல் நடவடிக்​கை​களில் ஈடு​படக்​கூ​டாது என்​ப​தில் தீர்​மான​மாக இருந்​தார். இதனால், சம்​பிர​தாய​மான கட்சி நிகழ்ச்​சிகளைத் தவிர வேறு எதற்​காக​வும் பூண்டி கலை​வாணன் மன்​னார்​குடி பக்​கம் தலை​காட்​டு​வ​தில்​லை.

திமுக உள்​கட்சி தேர்​தலிலும் இவர்​களுக்கு இடையி​லான அதி​கார யுத்​தம் ஆங்​காங்கே தலை​தூக்​கியது. பூண்டி கலை​வாணன் மாவட்​டம் முழுக்க தனது செல்​வாக்கை வியாபித்து வைத்​திருந்​தா​லும் ஒன்​றி​யங்​களை இரண்​டாகப் பிரித்து அங்​கெல்​லாம் தனது ஆதர​வாளர்​களை பதவிக்கு கொண்டு வந்​ததன் மூலம் மன்​னார்​குடி தொகு​திக்​குள் மட்​டுமல்​லாது திருத்​துறைப் பூண்​டி​யிலும் தனது செல்​வாக்கை படர​விட்​டார் ராஜா.

இதனிடையே, இரண்டு தொகு​திக்கு ஒரு மாவட்​டச் செய​லா​ளர் என்ற சிஸ்​டத்தை திமுக தலைமை அமல்​படுத்​தப் போவ​தாக வந்த தகவல்​களை அடுத்து திரு​வாரூர் மாவட்​டத்​தை​யும் இரண்​டாகப் பிரித்து அதில் ஒன்​றுக்​கு, தான் செய​லா​ள​ராக வரவேண்​டும் என பிர​யாசைப்​பட்​டார் ராஜா. ஆனால், இதனால் தங்​களுக்​கான அதி​கார வரம்பு குறைக்​கப்​படும் என்​ப​தால் மாவட்ட பிரி​வினையை கடுமை​யாக எதிர்த்​தது கலை​வாணன் தரப்​பு.

இதனிடையே, இரண்டு தொகு​திக்கு ஒரு மாவட்​டச் செய​லா​ளர் என்ற சிஸ்​டத்தை திமுக தலைமை அமல்​படுத்​தப் போவ​தாக வந்த தகவல்​களை அடுத்து திரு​வாரூர் மாவட்​டத்​தை​யும் இரண்​டாகப் பிரித்து அதில் ஒன்​றுக்​கு, தான் செய​லா​ள​ராக வரவேண்​டும் என பிர​யாசைப்​பட்​டார் ராஜா. ஆனால், இதனால் தங்​களுக்​கான அதி​கார வரம்பு குறைக்​கப்​படும் என்​ப​தால் மாவட்ட பிரி​வினையை கடுமை​யாக எதிர்த்​தது கலை​வாணன் தரப்​பு.

இந்​தப் பிரச்​சினையை முடிவுக்​குக் கொண்டு வரு​வதற்​காக, அமைச்​சரவை மாற்​றத்​தின்​போது டி.ஆர்​.பி.​ராஜாவை அமைச்​ச​ராக்​கியது தலை​மை. இதையடுத்​து, மாவட்​டப் பிரி​வினை முழக்​கத்தை மறந்த ராஜா, தனது இலாக்கா சம்​பந்​தப்​பட்ட பணி​களை கவனிக்க ஆரம்​பித்​தார். இதையடுத்து நிம்​ம​தி​யான கலை​வாணன், மாவட்ட திமுக-​வில் தனது செல்​வாக்கை நிலை நிறுத்​தும் வேலை​களில் கவனத்​தைத் திருப்​பி​னார். தனது செயல்​பாடு​களால் கட்​சித் தலை​மை​யின் கூடு​தல் அபி​மானத்​தை​யும் பெற்​றார்.

அண்​மை​யில் திரு​வாரூருக்கு வருகை தந்த முதல்​வர் ஸ்டா​லின், “தி​ரா​விட மாடல் ஆட்​சி​யில் தொழில்​துறை வளர்ச்​சி​யின் மதிப்​பீட்டை அமைச்​சர் டி.ஆர்​.பி.​ராஜா​வின் செயல்​பாட்​டினை வைத்து கணிக்​கலாம்” என டி.ஆர்​.பி.​ராஜாவை​யும், “திரு​வாரூர் நகரத்தை இரண்டு நாட்​களாக திரு​விழாக் கோல​மாக மாற்றி வைத்​திருக்​கும் ஆற்​றல்​மிகு செய​லா​ளர் பூண்டி கலை​வாணன்” என்று பூண்டி கலை​வாணனை​யும் சரிசம​மாகப் பாராட்​டி​னார்.

இதுகுறித்து நம்​மிடம் பேசிய திரு​வாரூர் திமுக நிர்​வாகி​கள் சிலர், ராஜாவுக்​கும் கலை​வாணனுக்​கும் அதி​காரப் போட்டி இருந்​தது உண்​மை​தான். ஆனால், ராஜா அமைச்​ச​ரான பிறகு அந்​தப் போக்கு மாறி​விட்​டது. இப்​போது, தேவையற்ற சர்ச்​சைகளை தவிர்ப்​ப​தற்​காக திரு​வாரூர், நன்​னிலம், திருத்​துறைப்​பூண்டி தொகுதி சம்​பந்​தப்​பட்ட விஷ​யங்​களை ராஜா கண்​டும் காணாது ஒதுங்​கி​விடு​கி​றார். அதே​போல், மன்​னார்​குடி தொகுதி சம்​பந்​தப்​பட்ட விவ​காரம் என்​றால், “அமைச்​சரைப் பாருங்​கள்” என கலை​வாணனும் நாசூக்​காக ஒதுங்​கி​விடு​கி​றார். இது இப்​படியே தொடர்ந்​தால் யாருக்​கும் எந்​தப் பிரச்​சினை​யும் இருக்​காது” என்​றார்​கள்​.