விர்ருனு திருவண்ணாமலையில் ஏறிய ஆடுகள்.. செங்கம் ஆட்டு சந்தையில் வியாபாரிகள் குஷி.. ஆடி மாதம் அசத்தல்

விர்ருனு திருவண்ணாமலையில் ஏறிய ஆடுகள்.. செங்கம் ஆட்டு சந்தையில் வியாபாரிகள் குஷி.. ஆடி மாதம் அசத்தல்
வியாபாரிகள் குஷி.. ஆடி மாதம் அசத்தல்..

திருவண்ணாமலை: ஆடி மாதம் துவங்கியிருக்கும் நிலையில், தமிழகத்தின் கால்நடை சந்தைகளில் ஆடுகள், கோழிகளின் வரத்து அதிகரித்துள்ளது.. இதனால், வியாபாரமும் சூடுபிடித்து காணப்படுகிறது.. அதிலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆட்டு சந்தை வியாபாரம் அசர வைத்துள்ளது.. செங்கத்தில் நடந்த சந்தையில் ஆடு, கோழிகள் சுமார் ரூ.10 லட்சத்திற்கு விற்பனையானது மிகுந்த மகிழ்ச்சியை கால்நடை விவசாயிகளுக்கு ஏற்படுத்தி கொண்டிருக்கிறது...

ஆடி பண்டிகையில் அசைவ உணவாக ஆட்டுக்கறி பிரதான இடத்தை பிடித்துள்ளது என்பதால், இறைச்சி கடைகளில் வழக்கமான விற்பனையை விட ஆடி பண்டிகையில் விற்பனை பல மடங்காகும் என்பதால், வியாபாரிகள் ஆர்வத்துடன் காத்திருப்பார்கள்..

இதற்காகவே, தங்களது கிராமங்களில் வளர்க்கப்படும் வெள்ளாடுகளை, ஆண்டும் தீபாவளி, தைப்பொங்கல் நேரங்களில் அதிக விலை வைத்து விற்பார்கள்.. அதுபோலவே ஆடி மாதங்களிலும் ஆடுகளுக்கு கிராக்கி உள்ளதால், கணிசமான லாபத்தை ஈட்ட முயன்றுள்ளனர்...

கால்நடை விவசாயிகள் மகிழ்ச்சி

ஆடு வளர்ப்பவர்களுக்கும், ஆடு வாங்குபவர்களுக்கும் முக்கியமான மாதமாக ஆடி மாதம் விளங்குவதற்கு காரணம், ஆடி மாதத்தில் வரும் ஆடிப் பண்டிகையை முன்னிட்டு, ஆடுகளை பலி கொடுப்பதற்கும், இறைச்சிக்காகவும் வாங்க நேரிடுகிறது.. குலதெய்வ கோயிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்துதல் உள்பட பல திருவிழாக்கள், காதணி விழா போன்றவைகளுக்கும் ஆடுகளின் தேவை பெருகுகிறது.

மேலும், ஆடி துவக்கத்தை புதுமண தம்பதிகள் முதல் ஆடியாகவும், ஆடி கடைசி வாரத்தில் கடைசி ஆடியாகவும் கொண்டாடி மகிழ்கிறார்கள்.. இதன்காரணமாக, பெரும்பாலான வீடுகளில் ஆடி துவக்கத்திலும் இறுதியிலும் அசைவ உணவே இடம்பெறும்...

ஆடிப்பண்டிகை முக்கியத்துவம்

ஆடிப் பண்டிகையை முன்னிட்டு ஆடுகளின் தேவை அதிகரித்துள்ளது.. கடந்த ஆடி முதல் நாளில் இருந்து ஆடுகளின் விற்பனை களைகட்டி காணப்படுகிறது... ஆடுகளுக்கான தேவை அதிகமாக இருப்பதால், ஆடுகளின் விலையும் அதிகரித்தே காணப்படுகிறது...

கால்நடை விவசாயிகள் மகிழ்ச்சி

ஆடு வளர்ப்பவர்களுக்கும், ஆடு வாங்குபவர்களுக்கும் முக்கியமான மாதமாக ஆடி மாதம் விளங்குவதற்கு காரணம், ஆடி மாதத்தில் வரும் ஆடிப் பண்டிகையை முன்னிட்டு, ஆடுகளை பலி கொடுப்பதற்கும், இறைச்சிக்காகவும் வாங்க நேரிடுகிறது.. குலதெய்வ கோயிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்துதல் உள்பட பல திருவிழாக்கள், காதணி விழா போன்றவைகளுக்கும் ஆடுகளின் தேவை பெருகுகிறது.

மேலும், ஆடி துவக்கத்தை புதுமண தம்பதிகள் முதல் ஆடியாகவும், ஆடி கடைசி வாரத்தில் கடைசி ஆடியாகவும் கொண்டாடி மகிழ்கிறார்கள்.. இதன்காரணமாக, பெரும்பாலான வீடுகளில் ஆடி துவக்கத்திலும் இறுதியிலும் அசைவ உணவே இடம்பெறும்.

ஆடிப்பண்டிகை முக்கியத்துவம்

ஆடிப் பண்டிகையை முன்னிட்டு ஆடுகளின் தேவை அதிகரித்துள்ளது.. கடந்த ஆடி முதல் நாளில் இருந்து ஆடுகளின் விற்பனை களைகட்டி காணப்படுகிறது... ஆடுகளுக்கான தேவை அதிகமாக இருப்பதால், ஆடுகளின் விலையும் அதிகரித்தே காணப்படுகிறது.

வியாபாரிகள் பலரும் ஆடு வளர்ப்பவர்களிடம் முன்கூட்டியே ஆடுகளை வாங்குவதற்கு புக்கிங் செய்திருந்தாலும்கூட, ஆடுகளின் எண்ணிக்கை உள்ளூர் தேவைகளை பூர்த்தி செய்ய முடிவதில்லையாம்.. எனவே, வெளியூர்களில் இருந்தும் ஆடுகளை சில வியாபாரிகள் கொண்டு வருவதாக தெரிகிறது.

அசரவைத்த செங்கம் மார்க்கெட்

இந்நிலையில், ஆடி மாதம் என்பதால் திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் நடந்த சந்தையில் ஆடு, கோழிகள் சுமார் ரூ.10 லட்சத்திற்கு விற்பனை.யாகி இருக்கிறது..

செங்கத்தில் ஞாயிறுதோறும், ஆடு மற்றும் கோழி விற்பனை சந்தை நடைபெறுவது வழக்கமாகும். இந்த வாரச்சந்தையில், செங்கம் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்கள், நகர்ப்புறங்களைச் சேர்ந்தவர்கள் தங்களின் ஆடு மற்றும் கோழிகளை விற்பனை இந்த கால்நடை சந்தையில் விற்பனை செய்வார்கள்..

எனவே, வெளியூர் மற்றும் வெளி மாவட்ட, வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகளும் வந்து ஆடு, கோழிகளை வாங்கிக்கொண்ட போவார்கள்.

தற்போது ஆடி மாதம் என்பதால், கோயில் திருவிழாக்கள், காதணி விழா உள்ளிட்ட நிகழ்வுகளுக்காக, ஆடு, கோழிகளை வாங்குவதற்கு அதிகளவில் குவிந்து வருகிறார்கள்.. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த வாரச்சந்தையில், ரூ.10 லட்சத்திற்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் கூறுகிறார்கள்.. இந்த மாதம் முடியும்வரை, ஆடுகளின் வரத்தும், விற்பனையும், விலையும் பெருகும் என்ற நம்பிக்கையில் திருவண்ணாமலை மாவட்ட கால்நடை விவசாயிகள் உள்ளனர்...