ஷாப்பிங் மால்களில் பார்க்கிங் கட்டணம் உண்டா..இல்லையா? சட்டம் சொல்வது என்ன...

ஒரு மணி நேரத்திற்கு பார்க்கிங் கட்டணமாக ருபாய் 80 பார்க்கிங் கட்டணமாக வசுலித்தது.இதனை எதிர்த்து அருண் நுகர்வோர் ஆணையத்தில் புகராளிக்க மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் அந்த வணிக வளாகத்தைத் கண்டித்து, ₹10,000 இழப்பீடு வழங்க உத்தரவிட்டது
மேலும் வணிக வளாகங்களில் பார்க்கிங் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்துவதென்பது அந்தந்த வணிகநிறுவனங்களின் பொறுப்பென்றும் குறிப்பிட்டு இருந்தது.இந்த உத்தரவு அனைத்து வணிக வளாகங்களுக்கும் பொறுத்துமா? வணிக வளாகங்கள்இதுப்போன்ற கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டால் வாடிக்கையாளர்கள் செய்ய வேண்டியது என்னவென்பதை பற்றி விளக்கும் வழக்கறிஞர் துரை அருண்.
மால்களில் இது போன்ற கட்டணங்களை வசூலிப்பது என்பது Tamil Nadu Combined and Development Building Rules 2019 என்ற விதியின் படி, வணிக வளாகங்களில் வாடிக்கையாளர்களுக்கு பார்க்கிங் வசதி ஏற்படுத்துவது, அந்தந்த வணிக வளாகத்தின் கடமை என்றே இந்த விதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், இந்த வழக்கை எடுத்துக் கொண்டால், மாவட்ட நுகர்வோர் ஆணையமே அந்த வணிக வளாகத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. இது முறையற்ற வர்த்தக நடைமுறை என்று குறிப்பிட்டுள்ளது.