கால்நடை வளர்ப்போருக்கு குட்நியூஸ்.. 14000 ரூபாய் மானியமாக கிடைக்கும்.. கலெக்டர் வெளியிட்ட அறிவிப்பு

தேனி: தமிழக அரசின் மாநில தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்கான தீவனப்புல் நறுக்கும் கருவி 50 சதவீத மானியத்தில் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் தேனி மாவட்ட விவசாயிகளுக்கு 30 எண்ணிக்கையிலான தீவனப்புல் நறுக்கும் கருவிகள் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட் தேனி கலெக்டர் ரஞ்ஜீத் சிங் அறிவித்துள்ளார். தீவன புல் நறுக்கும் கருவி ஒன்றின் விலை தோராயமாக ரூ.29 ஆயிரம் ஆகும். இதில் 50 சதவீதம் மானியமாக வழங்கப்படும் என்றார்
தேனி கலெக்டர் ரஞ்ஜீத் சிங் வெளியிட்ட அறிவிப்பில் கூறுகையில், "தமிழக அரசின் மாநில தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்கான தீவனப்புல் நறுக்கும் கருவி 50 சதவீத மானியத்தில் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் தேனி மாவட்ட விவசாயிகளுக்கு 30 எண்ணிக்கையிலான தீவனப்புல் நறுக்கும் கருவிகள் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது
இந்த புல் நறுக்கும் கருவிகள் கால்நடைகளுக்கு உணவாக வழங்கப்படும் தீவனப் பயிர்களை சிறிய மற்றும் எளிதில் விழுங்கக்கூடிய சிறு துண்டுகளாக நறுக்கவோ அல்லது துண்டாக்கவோ பயன்படுத்தப்படுகின்றன.
இதனால் கால்நடைகள் எளிதாக சாப்பிடவும் ஜீரணிக்கவும் முடிகிறது. இந்த செயல்முறை தீவனத்தின் ஊட்டச்சத்து மதிப்பை அதிகரிக்கிறது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பவர்கள், கால்நடை வளர்க்கும் சிறு, குறு விவசாயிகளாக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 2 மாடுகள் மற்றும் 20 ஆடுகள் வைத்திருக்க வேண்டும்
குறைந்தபட்சம் 0.25 ஏக்கரில் தீவனப்புல் சாகுபடி நிலத்தோடு மின் வசதியை பெற்றிருக்க வேண்டும். தீவன புல் நறுக்கும் கருவி ஒன்றின் விலை தோராயமாக ரூ.29 ஆயிரம் ஆகும். இதில் 50 சதவீதம் மானியமாக வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை தொடர்பு கொள்ளலாம்" இவ்வாறு கூறியுள்ளார்.
தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக ஆடு மற்றும் வளர்ப்பு தொழில் பிரதானமாக இருக்கிறது. விவசாயிகள் மற்றும் பொதுமக்களை ஆடுகள் மற்றும் மாடுகள் வளர்த்து விற்பனை செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால் போதிய அளவில் தற்போது லாபம் இல்லை என கூறப்படுகிறது. இந்த தொழிலை ஊக்குவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது