வீட்டில் இருந்தே வேலை.. HCL தரும் சூப்பர் வாய்ப்பு.. சூப்பர் சான்ஸை மிஸ் பண்ணாதீங்க.

சென்னை: முன்னணி ஐடி நிறுவனமான எச்சிஎல்-லில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்யவும் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. இந்த பணி குறித்த முக்கிய விவரங்கள் வருமாறு:
நம் நாட்டில் செயல்படும் ஐடி நிறுவனங்களில் மிகவும் பிரபலமான ஒன்று எச்சிஎல் டெக்னாலஜிஸ். இந்த நிறுவனம் சார்பில் அடுத்தடுத்து வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.
அந்த வகையில் தற்போது எச்சிஎல் நிறுவனத்தில் Vue.JS Developer பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் சம்பந்தப்பட்ட பிரிவில் 5 முதல் 9 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். குறிப்பாக Front End Development-ல் 5 ஆண்டுகளுக்கும் அதிக அனுபவம் கொண்டிருக்க வேண்டும். அதேபோ் Vue.js (2.x or 3.x) தெரிந்திருக்க வேண்டும்...
ஜாவா ஸ்கிரிப்ட், டைப்ஸ்கிரிப்ட், எச்டிஎம்எல் 5, சிஎஸ்எஸ் 3/எஸ்சிஎஸ்எஸ் உள்ளிட்டவற்றில் நல்ல திறன் இருக்க வேண்டும். அதேபோல் Vue Router, Vuex மற்றும் காம்போனன்ட் பேஸ்ட் ஆர்க்கிடெக்ச்சர் உள்ளிட்டவற்றில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். Vite, Webpack உள்ளிட்டவற்றில் நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும்.
Git, Ci/CD pipelines, Code Versioning workflows உள்ளிட்டவற்றில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். அதேபோல் டெஸ்ட்டிங் லை்ரேரிஸான Jest மற்றும் Vitest உள்ளிட்டவற்றை அறிந்து வைத்திருக்க வேண்டும். Responsive Design, Mobile first Developement உள்ளிட்டவற்றை அறிந்து வைத்திருக்க வேண்டும்...
தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். அதேபோல் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதியும் குறிப்பிடப்படவில்லை. அறிவிப்பு வெளியாகி 3 நாட்கள் ஆகிவிட்டது. இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடியலாம்..
எனவே தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது. இது ஒரு PAN India வகை பணியாகும். இதனால் இந்தியாவில் உள்ள எந்த எச்சிஎல் நிறுவனத்தில் வேண்டுமானாலும் பணி நியமனம் செய்யப்படலாம். இந்த பணிக்கு Remote ஆப்ஷனும் உள்ளதால் வீட்டில் இருந்தும் பணியாற்றலாம்.