மதுரையில் ரூ.3.75 கோடி ஹவாலா பணம் பறிமுதல்..

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வாகன நிறுத்தத்தில் ஹவாலா பணத்தை ஒரு கும்பல் காரில் வைத்துகைமாற்றுவதாக விளக்குத்துாண் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது...
இன்ஸ்பெக்டர் சங்கர்கண்ணன் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று அந்த கும்பலை சுற்றி வளைத்துபிடித்தனர்.
அவர்களிடமிருந்து 3.75 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக மதுரையை சேர்ந்த பாபுராவ் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
போலீசில் அவர்கள் கொடுத்த விளக்கம் குறித்து தற்போது வருமான வரித்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.