செருப்பில் போதைப்பொருள் கடத்தல் ஹோட்டல் உரிமையாளர் கைது

செருப்பில் போதைப்பொருள் கடத்தல் ஹோட்டல் உரிமையாளர் கைது
செருப்பில் போதைப்பொருள் கடத்தல் ஹோட்டல் உரிமையாளர் கைது

ஹைதராபாத் : பெண்கள் அணியும் 'ஹீல்ஸ்' செருப்புகள் வழியே கோகைன் உள்ளிட்ட போதைப்பொருட்களை கடத்தி, முக்கிய நபர்களுக்கு விற்பனை செய்த ஓட்டல் உரிமையாளர் உட்பட ஆறு பேரை, தெலுங்கானா போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.

தெலுங்கானாவின் ஹைதராபாதில், உள்ள முக்கிய கேளிக்கை விடுதிகளில் போதைப்பொருள் வினியோகிக்கப்படுவதாக 'ஈகிள்' சிறப்பு படைக்கு தகவல் கிடைத்தது. போதைப்பொருட்களை வாங்கி, பிரபல தொழிலதிபர்கள், கேளிக்கை விடுதி உரிமையாளர்கள் ஆகியோருக்கு விற்பனை செய்வதாக கொம்பள்ளி பகுதியைச் சேர்ந்த, எம்.பி.ஏ., பட்டதாரியான சூர்யா அன்னமானேனி என்பவர் மீது, சந்தேகம் 

அவரை, பின்தொடர்ந்ததில், 'மல்நாடு கிச்சன்' என்ற பெயரில் உணவகம் ஒன்றை நடத்தி, அங்கு அவர் போதைப்பொருள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது காரில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில், கோகைன், கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

காரில் இருந்த பெண் ஒருவரின் 'ஹீல்ஸ்' செருப்பை சோதனையிட்டதில், அதற்குள் கோகைன் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, சூர்யா உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.