கர்நாடக முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி: பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு

கர்நாடக முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி: பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு
கர்நாடக முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி: பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு

பெங்களூரு: ​பாலியல் வன்​கொடுமை வழக்​கில் முன்​னாள் பிரதமர் தேவக​வு​டா​வின் பேரனும், கர்​நாடக முன்​னாள் எம்​பி​யு​மான பிரஜ்வல் ரேவண்ணா குற்​ற​வாளி என பெங்​களூரு சிறப்பு நீதி​மன்​றம் நேற்று தீர்ப்​பளித்​தது. முன்​னாள் பிரதமர் தேவக​வு​டா​வின் பேரனும் மஜத முன்​னாள் எம்​பி​யு​மான பிரஜ்வல் ரேவண்ணா (33) பல்​வேறு பெண்​களு​டன் நெருக்​க​மாக இருக்​கும் 3 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட வீடியோக்​கள் கடந்த 2024-ம் ஆண்டு ஏப்​ரல் மாதம் வெளி​யாகி பெரும் பரபரப்பை ஏற்​படுத்​தின.

இதையடுத்து அவரது வீட்டு பணிப்​பெண், மஜத கிராம பஞ்​சா​யத்து தலைவி உட்பட 5 பெண்​கள் பிரஜ்வலுக்கு எதி​ராக புகார் அளித்​தனர். அதன்​பேரில் அவர் மீது 5 பாலியல் வன்​கொடுமை வழக்​கு​கள் பதிவு செய்​யப்​பட்​டன. இந்த வழக்​கில் கைது செய்​யப்​பட்ட பிரஜ்வல் ரேவண்ணா பெங்​களூரு மத்​திய சிறை​யில் அடைக்​கப்​பட்​டுள்​ளார். சிறப்பு விசா​ரணை பிரிவு போலீ​ஸார் இவ்​வழக்கில் 1,632 பக்க குற்​றப்​பத்​திரி​கையை தாக்​கல் செய்​துள்ளனர்.

பெங்​களூரு​வில் மக்​கள் பிர​தி​நி​தி​கள் மீதான வழக்​கு​களை விசா​ரிக்​கும் சிறப்பு நீதி​மன்​றத்​தில் வழக்கு நடை​பெற்றது. அனைத்​துகட்ட விசா​ரணை​யும் நிறைவடைந்த நிலை​யில் பெங்​களூரு சிறப்பு நீதி​மன்ற நீதிபதி சந்​தோஷ் கஜனன் பட் ஆகஸ்ட் 1-ம் தேதி தீர்ப்பை அளிப்​ப​தாக கூறி​யிருந்​தார். இதனால் பிரஜ்வல் சிறை​யில் இருந்து பலத்த பாது​காப்​புடன் நேற்று நீதி​மன்​றத்​துக்கு அழைத்து வரப்​பட்​டார்.

அப்​போது நீதிபதி சந்​தோஷ் கஜனன் பட், ‘‘இவ்​வழக்​கில் குற்​றம்​சாட்​டப்​பட்​டுள்ள பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் வன்​கொடுமை குற்​றங்​கள் அரசு தரப்​பால் சந்​தேகத்​துக்​கிட​மின்றி நிரூபிக்​கப்​பட்​டுள்​ளன. அதற்​கான சாட்​சி​யங்​களும், ஆவணங்​களும் தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளன. அதன் அடிப்​படை​யில் பிரஜ்வல் ரேவண்ணா குற்​ற​வாளி என்​பது உறு​தி​யாகி​யுள்​ளது.அவருக்​கான தண்​டனை விவரங்​கள் ஆகஸ்ட் 2-ம் தேதி (இன்​று) வெளி​யிடப்​படும்​'' என தீர்ப்​பளித்​தார்.

இதனைக் கேட்ட பிரஜ்வல் ரேவண்​ணா, தலை​யில் கையை வைத்​துக்​கொண்டு கண்​ணீர் விட்டு அழு​தார். தேவக​வு​டா​வின் உறவினர்​களும், மஜத​வினரும் வருத்​தத்​தோடு நீதி​மன்​றத்​தில் இருந்து வெளி​யேறினர். இதுகுறித்து அரசு வழக்​கறிஞர் அசோக் நாயக் கூறுகை​யில், ‘‘இது பாதிக்​கப்​பட்ட பெண்​களுக்கு கிடைத்த வெற்​றி​யாகும்''என்​றார்​.