பிஹார் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: செப். 1-ம் தேதி வரை ஆட்சேபனை தெரிவிக்க அவகாசம்

பிஹார் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: செப். 1-ம் தேதி வரை ஆட்சேபனை தெரிவிக்க அவகாசம்
பிஹார் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: செப். 1-ம் தேதி வரை ஆட்சேபனை தெரிவிக்க அவகாசம்

புதுடெல்லி: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, வரைவு வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது.

பிஹார் மாநில சட்டப்பேரவைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை (எஸ்ஐஆர்) கடந்த ஒரு மாதமாக தேர்தல் ஆணையம் மும்முரமாக செய்து வந்தது. இந்த நடவடிக்கையின் போது பிஹாரில் இறந்து போனவர்கள், நிரந்தரமாக முகவரி மாற்றம் செய்தவர்கள் என ஆயிரக்கணக்கானோரை கண்டுபிடிக்க முடியவில்லை.

கடந்த ஜூலை 25-ம் தேதி தேர்தல் ஆணையம் கூறுகையில், “பிஹாரில் 35 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களை கண்டறிய முடியவில்லை. அவர்கள் நிரந்தரமாக இடம்பெயர்ந்திருக்கலாம்” என்று தெரிவித்தனர். இதற்கு காங்கிரஸ் உட்பட பல்வேறு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்​நிலை​யில், பிஹார் வரைவு வாக்​காளர் பட்​டியலை தலைமை தேர்​தல் ஆணை​யம் நேற்று வெளி​யிட்​டது. பிஹாரில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தம் செய்​வதற்கு முன்​னர், கடந்த ஜூன் மாதம் 7.93 கோடி வாக்​காளர்​கள் இருந்​தனர். ஆனால், வாக்​காளர்​களின் மொத்த எண்​ணிக்கை குறித்து இதில் தகவல் வெளி​யிடப்​பட​வில்​லை. தேர்​தல் ஆணை​யத்​தின் அதி​காரப்​பூர்வ இணை​யதளத்​தில் இந்த வரைவு வாக்​காளர் பட்​டியல் வெளி​யிடப்​பட்​டுள்​ளது.

வாக்​காளர்​கள் இந்​தப் பட்​டிலில் தங்​கள் பெயர்​களைச் சரி​பார்க்​கலாம். பெயர்​கள் விடு​பட்​டிருந்​தால் பெயர்​களைச் சேர்க்க கோரிக்கை விடுக்​கலாம். மேலும், இந்தப் பட்​டியல் அங்​கீகரிக்​கப்​பட்ட அரசி​யல் கட்​சிகளுக்​கும் வழங்​கப்​படும் என்று ஏற்​கெனவே ஆணை​யம் அறி​வித்​துள்​ளது. பட்​டியலில் திருத்​தம் இருந்​தால், அது தொடர்​பாக அவர்​கள் கோரிக்கை விடுக்​கலாம். செப்​டம்​பர் 1-ம் தேதி வரை ஆட்​சேபனை​கள் தெரி​வித்து சரி செய்து கொள்​ளலாம் என்று தேர்​தல் ஆணை​யம் ஒரு மாதம் அவகாசம் அளித்​துள்​ளது.

மேலும், வரைவு வாக்​காளர் பட்​டியலின் நகல்​கள் அங்​கீகரிக்​கப்​பட்ட அரசி​யல் கட்​சிகளுக்கு வழங்​கப்​படும் என்று தேர்​தல் ஆணை​யம் கூறி​யுள்​ளது.