தூத்துக்குடி தட்டி தூக்கிவிட்டதே.. மொத்த நாடும் திரும்பி பார்க்க போகுது.. அசந்து போக வைத்த சம்பவம்

தூத்துக்குடி தட்டி தூக்கிவிட்டதே.. மொத்த நாடும் திரும்பி பார்க்க போகுது.. அசந்து போக வைத்த சம்பவம்
தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள VinFast கார் தொழிற்சாலைக்

தூத்துக்குடி: தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள VinFast கார் தொழிற்சாலைக்கு, 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் அரசு பாலிடெக்னிக், அரசு ஐ.டி.ஐ. மாணவர்கள் 200 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்

அடுத்த 5 ஆண்டுகளில் இது 3,500 ஆக உயரும் எனத் தகவல் வெளியாகி உள்ளது. ஆண்டுக்கு 1.50 லட்சம் மின் வாகனங்களை உற்பத்தி செய்ய உள்ள இந்த ஆலையில், 80% பணியாளர்கள் சுற்றுப்புற ஊர்களில் இருந்தே தேர்வு 

தூத்துக்குடி தட்டி தூக்கிவிட்டதே.. மொத்த நாடும் திரும்பி பார்க்க போகுது.. அசந்து போக வைத்த சம்பவம்

தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள VinFast கார் தொழிற்சாலைக்கு, 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் அரசு பாலிடெக்னிக், அரசு ஐ.டி.ஐ. மாணவர்கள் 200 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

அடுத்த 5 ஆண்டுகளில் இது 3,500 ஆக உயரும் எனத் தகவல் வெளியாகி உள்ளது. ஆண்டுக்கு 1.50 லட்சம் மின் வாகனங்களை உற்பத்தி செய்ய உள்ள இந்த ஆலையில், 80% பணியாளர்கள் சுற்றுப்புற ஊர்களில் இருந்தே தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தூத்துக்குடியில் அமைக்கப்பட்டு வரும் வின்பாஸ்ட் தொழிற்சாலையின் கட்டுமானம் முடிந்து உள்ளது. வரும் ஆகஸ்ட் மாதம் இறுதியில் இந்த வின்பாஸ்ட் ஆலை திறக்கப்பட உள்ளது. உட்புறம் அனைத்து மெஷின்களும் பொருத்தப்பட்ட நிலையில், விரைவில் சோதனைகள் செய்யப்பட உள்ளது. சோதனைகள் முடிந்த பின் ஆகஸ்ட் கடைசி வாரம் ஆலை திறக்கப்படும்.

இந்தியாவில் மிக வேகமாக மேற்கொள்ளப்பட்ட திட்டம் இதுதான். அதாவது முதலீடு அறிவிக்கப்பட்டு அது புரிந்துணர்வு ஒப்பந்தமாக மாறி.. முதலீடாக மாறி.. தொழிற்சாலையாக மாறியதில் இந்த திட்டம்தான் மிக வேகமான திட்டம் ஆகும். கடந்த வருடம்தான் ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில் அனைத்து அனுமதிகளை முடிந்து தளம், மற்றும் கூரை அமைக்கும் பணிகள் முடிந்ததோடு.. உள்ளே மெஷின்களை நிறுவும் பணிகளும் முடிந்து உள்ளன. இதன் மூலம் தமிழ்நாட்டின் ஏற்றுமதி மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தமிழகத்தின் ஏற்றுமதி முதன்முறையாக 50 பில்லியன் டாலர்களைத் தாண்டியுள்ளது. கடந்த ஆண்டோடு ஒப்பிடும் போது இது 9 பில்லியன் டாலர் கூடுதல் ஆகும். இதன் மூலம் இந்தியாவில் எந்த பெரிய மாநிலத்திலும் இல்லாத அதிகபட்ச உயர்வை தமிழ்நாடு பதிவு செய்துள்ளது.

-25 நிதியாண்டில் இந்தியாவின் ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் மொத்தப் பங்கு 13.38% (கடந்த ஆண்டில் 10.15% இல் இருந்து உயர்ந்து உள்ளது). இந்த முறை $52.073 பில்லியன் மதிப்புள்ள வணிகப் பொருட்களை மாநிலம் ஏற்றுமதி செய்தது. கடந்த ஆண்டு தமிழ்நாடு $43.56 Bn செய்தது. அதாவது தமிழ்நாடு அரசு 9 பில்லியன் டாலர் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இப்போது தூத்துக்குடி வின்பாஸ்ட் ஆலை மூலம் தமிழ்நாட்டின் ஏற்றுமதி மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தூத்துக்குடி

தூத்துக்குடி கொஞ்சம் கொஞ்சமாக முதலீட்டாளர்கள் கவனத்தை ஈர்க்க தொடங்கி உள்ளது. தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி தொழிற்சாலைகளின் கிளஸ்டராக மாற தொடங்கி உள்ளது. தற்போது வெளியாகி இருக்கும் ரிப்போர்ட் ஒன்றும் கூட அதை உறுதி செய்யும் விதமாக அமைந்துள்ளது. இந்தியாவின் ஹைட்ரஜன் ஹப்பாக தூத்துக்குடி மாற தொடங்கி உள்ளது

ACME - 52,000 கோடி

பெட்ரோனாஸ் - 34,000 கோடி

செம்பிகார்ப் (இன்று) - 36,238 கோடிகள்

லீப் கிரீன் எனர்ஜி (இன்று)- 22,842 கோடிகள்

என்டிபிசி ஆகியவை முதலீடு செய்துள்ளனர். இந்திய அரசு ஏற்கனவே VOC துறைமுகத்தை ஹைட்ரஜன் சேமிப்பு மையமாக அறிவித்துள்ளது.

தூத்துக்குடி சாதனை: சென்னைக்கு அடுத்தபடியாக தூத்துக்குடியில்தான் மாநிலத்திலேயே அதிக சிப்காட் தொழில் பூங்காக்கள் இருக்கும். சென்னையில் கிட்டத்தட்ட 20 ஆயிரம் ஏக்கருக்கு சிப்காட் உள்ளது .

1. தூத்துக்குடி Ph-1 & 2 : 2509 ஏக்கர் (தற்போது உள்ளது)

2. வைப்பார்: 1,020

3. சிலாநாதம்: 394

4. அல்லிகுளம்: 2,234

5. வேம்பூர்: 2,814

6. இ.வேலாயுதபுரம் : 355

7. மரச்சாமான்கள் பூங்கா : 1,100 ஏக்கர்

????????சிலாநத்தம் சிப்காட்டில் வின்ஃபாஸ்ட் வர வாய்ப்புள்ளது. வரவிருக்கும் அற்புதமான காலங்கள்

.வின்பாஸ்ட்: இது போக சென்னைக்கு வர இருந்த வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனம் தூத்துக்குடியில் கட்டுமானத்தை மேற்கொண்டு வருகிறது. டெஸ்லாவிற்கு போட்டியாக இருக்கும் வின்பாஸ்ட் நிறுவனம்தான் தமிழ்நாட்டிற்கு வந்து உள்ளதாக செய்திகள் வருகின்றன. வின்ஃபாஸ்ட் ஆட்டோ லிமிடெட் என்பது வியட்நாமை தளமாகக் கொண்ட ஒரு வாகன நிறுவனமாகும் இது வியட்நாமின் மிகப்பெரிய தனியார் நிறுவனங்களில் ஒன்றாகும்.

அருகருகே வருகின்றன: தூத்துக்குடியில் திங்கள் முதல் வின்பாஸ்ட் தொழிற்சாலையின் கட்டுமானம் தொடங்க உள்ளது. இந்த இடத்திற்கு அருகிலேயே தூத்துக்குடி சிப்காட்டில் அமையும் சர்வதேச பர்னிச்சர் பார்க் அமைக்கப்பட உள்ளது.

இப்போது இ வாகனங்கள் தயாரிப்பில் முன்னிலையில் இருக்கிறது. மின்சார கார்கள் மற்றும் மின்சார ஸ்கூட்டர்கள் போன்ற மின்சார வாகனங்களை (EV) தயாரிப்பதில் விரிவடையும் முதல் கார் பிராண்டாகும். உலகின் நம்பர் 1 பிராண்ட் இதுதான். இந்த நிறுவனம்தான் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முடிவெடுத்துள்ளது. அதுவும் தூத்துக்குடிக்கு தேடி வந்துள்ளது.

கிளஸ்டர்: இந்திய நிலையில் தூத்துக்குடி கொஞ்சம் கொஞ்சமாக முதலீட்டாளர்கள் கவனத்தை ஈர்க்க தொடங்கி உள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, ஓசூருக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி ஆட்டோமொபைல் கிளஸ்டராக மாற தொடங்கி உள்ளது என்று தமிழ்நாடு கைடன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தூத்துக்குடியில் கடந்த 1 வருடத்தில் ஏகப்பட்ட முதலீடுகள் குவிந்து உள்ளன. சென்னை, ஓசூருக்கு அடுத்ததாக தூத்துக்குடி மிக வேகமாக முன்னேறி வருகிறது. கடந்த 1 வருடத்தில் தூத்துக்குடிக்கு 1,40,000 கோடி மதிப்பிலான முதலீட்டு திட்டங்கள் கிடைத்துள்ளன. மொத்த தமிழ்நாடு மாநிலத்தை பசுமையான ஹைட்ரஜன் மையமாக மாற்ற தூத்துக்குடி மையமாக மாறி உள்ளது.

தமிழ்நாடு இப்போது இ வாகனங்கள் தயாரிப்பில் முன்னிலையில் இருக்கிறது. மின்சார கார்கள் மற்றும் மின்சார ஸ்கூட்டர்கள் போன்ற மின்சார வாகனங்களை (EV) தயாரிப்பதில் விரிவடையும் முதல் கார் பிராண்டாகும். உலகின் நம்பர் 1 பிராண்ட் இதுதான். அதுவும் தூத்துக்குடிக்கு தேடி வந்துள்ளது