அப்பாவுக்கு தப்பாத மகன்.. சிவகார்த்திகேயன் மனைவி மகிழ்ச்சியாக பகிர்ந்த போஸ்ட்.. குவியும் வாழ்த்து

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் அவருடைய மகன் குகன் உடன் எடுத்த புகைப்படங்களை சிவகார்த்திகேயனின் மனைவி தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். இந்த பதிவுக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
உழைப்பும் விடாமுயற்சியும் இருந்தால் எப்போதும் ஒருவருக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாக கார்த்திகேயன் இருந்து வருகிறார். சினிமாவில் எப்படியாவது சாதிக்க வேண்டும் என்று பலரும் முயற்சி செய்து வருகிறார்கள். அவர்களுக்கெல்லாம் சிவகார்த்திகேயனும் ஒரு முன் மாதிரியாக இருக்கிறார்.
கடந்த வருடத்தில் அவருக்கு பல நல்ல விஷயங்கள் நடந்தது. அமரன் திரைப்படம் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு பெரிய சூப்பர் ஹிட் கொடுத்தது. அந்த திரைப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனின் அடுத்த திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. சின்ன திரையில் இருந்து வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைத்து காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடிக்க துவங்கிய சிவகார்த்திகேயன் இப்போது ஆக்சன் ஹீரோவாகவும் அவதாரம் எடுத்திருக்கிறார்.
சிவகார்த்திகேயன் தன்னுடைய ஒவ்வொரு திரைப்படத்திலும் ஒருவித வித்தியாசத்தை காட்டிக்கொண்டு இருக்கிறார். அமரன் திரைப்படத்திற்கு பிறகு இவருக்கு பெரிய பிரபலம் கிடைத்திருக்கிறது. ரஜினி- கமல்ஹாசனுக்கு பிறகு அஜித், விஜய் இருக்கிறார்கள். அவர்களை தொடர்ந்து தனுஷ்- விக்ரம் வரிசையில் இப்போது சிவகார்த்திகேயனும் உயர்ந்திருக்கிறார்.
நடிகர் சிவகார்த்திகேயன் விஜய் டிவியில் ஆரம்பத்தில் போட்டியாளராக கலந்து கொண்டு பிறகு விஜேவாக மாறி இப்போது சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கிறார். ஆனால் விஜய் டிவியில் வேலைக்கு சேர்வதற்கு முன்பு இசை கச்சேரிகளில் மிமிக்கிரி கலைஞராக வலம் வந்திருக்கிறார்
சிவகார்த்திகேயனின் அப்பா திருச்சியில் உயர் போலீஸ் அதிகாரியாக இருந்தவர். ஆனால் திடீரென்று அவர் இறந்து போய் இருக்கிறார். அப்போது சிவகார்த்திகேயன் கல்லூரியில் தான் படித்துக் கொண்டிருந்தாராம். தன்னுடைய அப்பாவை போல நானும் போலீசாக வேண்டும் என்று ஆசைப்பட்ட நிலையில் அவருடைய அம்மா அதற்கு அனுமதிக்கவில்லை என்பதால் மிமிக்ரி பக்கம் திரும்பி இருக்கிறார்.
அதற்கு பிறகு தான் விஜய் டிவியில் வேலை கிடைத்திருக்கிறது. சில வருடங்கள் விஜய் டிவியில் வேலை செய்து கொண்டிருக்கும் போது சினிமாவில் நுழைய வேண்டும் என்ற ஆர்வம் இருந்ததால் தனக்கு தெரிந்தவர்களிடம் எல்லாம் வாய்ப்பு தேடி அலைந்திருக்கிறார். அதுபோல சின்னத்திரையில் சிவகார்த்திகேயன் இருக்கும்போது அவருக்கு திருமணம் நடந்து விட்டது. அவருடைய சொந்த மாமன் மகளை தான் சிவகார்த்திகேயன் திருமணம் செய்து இருந்தார். திருமணத்திற்கு பிறகு குடும்ப பொறுப்பு அதிகரித்து விடுவதால் பலரும் தங்களுடைய கனவை நோக்கி பயணிக்காமல் அப்போதைய வருமானத்தை நோக்கி தான் பயணித்து வருகிறார்கள். ஆனால் சிவகார்த்திகேயனுக்கு அந்த மாதிரி குடும்ப நெருக்கடி ஏற்படவில்லை என்று நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்தார்.
அதுபோல சிவகார்த்திகேயனுக்கு ஆராதனா என்ற மகளும், குகன் மற்றும் பவன் இரண்டு மகன்களும் இருக்கின்றனர். இன்று குகனின் பிறந்த நாளாம். அதனால் குகனோடு எடுத்த புகைப்படங்களை சிவகார்த்திகேயன் மற்றும் அவருடைய மனைவி சோஷியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார். அந்தப் பதிவில் "பிறந்தநாள் வாழ்த்துக்கள் எங்களுடைய லிட்டில் ராக்ஸ்டார் குகன்" என்று குறிப்பிட்டிருக்கிறார். குகன் மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் ஒரே போல இருக்கும் புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.