கேரள லாட்டரியில் ”வீரம்” பட நடிகருக்கு அடிச்சது யோகம்.. அதுவும் இரண்டு தடவை.. அதிர்ஷ்டக்காரர்தான்

கேரள லாட்டரியில் ”வீரம்” பட நடிகருக்கு அடிச்சது யோகம்.. அதுவும் இரண்டு தடவை.. அதிர்ஷ்டக்காரர்தான்
அதுவும் இரண்டு தடவை.. அதிர்ஷ்டக்காரர்தான்

திருவனந்தபுரம்: தமிழ் மற்றும் மலையாள பட நடிகரும், வீரம் படத்தில் அஜித்துக்கு தம்பியாக நடித்தவருமான பாலாவுக்கு கேரள லாட்டரியில் பரிசு அடித்துள்ளது. அதுவும் ஒரு முறை அல்ல. இரண்டு முறை கேரள லாட்டரியில் பரிசு விழுந்துள்ளது.

கேரள லாட்டரி டிக்கெட்டுகளில் பரிசு வென்ற அதிர்ஷ்டசாலிகள் குறித்த பல்வேறு சுவாரசிய தகவல்கள் அவ்வப்போது வெளி வருவதை பார்க்க முடியும். லாட்டரி டிக்கெட் வாங்க கூட பணம் இன்றி கடனுக்கு வாங்கிய டிக்கெட்டிற்கு கூட பல லட்சங்கள் பரிசு அடித்த சுவாரசிய நிகழ்வுகளும் நடந்துள்ளன.

யாருக்கு எப்போது அதிர்ஷ்டம் அடிக்கும் என்று தெரியாததால், கேரளாவில் லாட்டரி பிரியர்கள் பலரும் தங்களது வாழ்க்கையிலும் ஒரு யோகம் அடித்து நாமும் பல கோடிகளுக்கு ஒரே நாளில் அதிபதி ஆகிவிட மாட்டோமா? என்று ஆர்வத்துடன் டிக்கெட்டுகளை வாங்குவதை பர்க்க முடிகிறது.

கேரளாவை பொறுத்தவரை அங்கு தினம் தோறும் லாட்டரி டிக்கெட்டுகள் அச்சிடப்பட்டு குலுக்கல் நடைபெறுகிறது. ரூ.50 விலை கொண்ட இந்த டிக்கெட்டுகளை கேரளாவில் ஏழை, பணக்காரர் என பாகுபாடு இல்லாமல் அனைத்து தரப்பினரும் வாங்குகிறார்கள். கேரளாவில் பணிபுரியும் வெளி மாநில தொழிலாளர்கள், யாத்ரீகர்கள் கூட டிக்கெட்டுகளை வாங்குவதை பார்க்க முடிகிறது.

வீரம் படத்தில் அஜித்துக்கு தம்பியாக

ஒரு சில நேரங்களில் வெளி மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு கூட டிக்கெட்டுகள் விழுந்து வாழ்நாளில் நினைத்து பார்க்க முடியாத திருப்பத்தை கொடுத்து விடுகிறது. லாட்டரி வாங்கிய பலருக்கும் டிக்கெட் வாங்கிய கூட மிஞ்சாத நிலை இருந்தாலும் ஏதோ ஒரு சில முறை யாருக்காவது அதிர்ஷ்டமும் அடித்து விடுகிறது. சரி இங்கே விஷயத்திற்கு வருவோம்

பிரபல மலையாள நடிகர் மற்றும் இயக்குநரான பாலா மற்றும் கோகிலா தம்பதிக்கு தான் இந்த பரிசு அடித்துள்ளது. நடிகர் பாலா தமிழில் அன்பு என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆனார். காதல் கிசுகிசு, அம்மா அப்பா செல்லம், மஞ்சள் வெயில், வீரம் படத்தில் அஜித் குமார் தம்பி முருகனாக நடித்து இருப்பார். இதேபோல் ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்தில் அர்ஜுனாக நடித்து இருப்பார்.

இரண்டு முறை பரிசு விழுந்தது

பாலா மற்றும் கோகிலா தம்பதிக்கு அண்மையில் லாட்டரியில் பரிசு விழுந்தது. காருண்யா லாட்டரி டிக்கெட்டை வாங்கிய இந்த தம்பதிக்கு தலா ரூ. 25 ஆயிரம் பரிசு அடித்து இருந்தது. தற்போது மீண்டும் அவர்களுக்கு பரிசு அடித்து இருக்கிறது. இந்த முறை பாக்யதாரா டிக்கெட்டில் பரிசு அடித்துள்ளது

பரிசுத்தொகை ரூ.100 என்றாலும் குறுகிய காலத்தில் இரண்டு முறை பரிசு அடித்து இருப்பது பாலாவையும் அவரது மனைவியும் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. தொகை குறைவாக இருந்தாலும் கூட அடுத்தடுத்து பரிசு அடித்து இருப்பதை, நல்ல விஷயங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதற்கான அறிகுறியாக பாலா பார்க்கிறாராம்.

இந்த தம்பதிக்கு அடுத்தடுத்து பரிசு அடித்து இருப்பது கேரள சேட்டன்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. அதேவேளையில் சில நெட்டிசன்கள், இந்த ஜோடி சொல்வதில் எந்த அளவு உண்மை உள்ளது என்பது தெரியவில்லை என்ற ரீதியில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

எனினும், இதற்கு பதிலளிக்கும் வகையில் தனது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டு இருக்க கூடிய பாலா, சில யூடியூபர்கள் எங்களுக்கு அடித்த 25 ஆயிரம் ரூபாய் பரிசு போலியானது என்று சொல்கிறார்கள். அவர்கள் தொடர்ந்து நெகட்டிவிட்டியை பரப்பட்டும். "நான் பாசிட்டிவ் எண்ணத்துடன் இருப்பதால், எனக்கு அதிர்ஷ்டம் தொடர்ந்து கிடைக்கிறது என்று நான் நம்புகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.