புது பாபா வங்கா சொன்னது அப்படியே நடக்குதே.. ஜப்பானை தாக்கிய 1000+ பூகம்பங்கள்! ஆய்வாளர்கள் வார்னிங்

புது பாபா வங்கா சொன்னது அப்படியே நடக்குதே.. ஜப்பானை தாக்கிய 1000+ பூகம்பங்கள்! ஆய்வாளர்கள் வார்னிங்
ஜப்பானில் ஒரு மிகப் பெரிய பேரழிவு தாக்கும் என்று அந்நாட்டின் பாபா வங்கா என அழைக்கப்படும் ரியோ டாட்சுகி கணித்திருந்தார்.

டோக்கியோ: ஜப்பானில் ஒரு மிகப் பெரிய பேரழிவு தாக்கும் என்று அந்நாட்டின் பாபா வங்கா என அழைக்கப்படும் ரியோ டாட்சுகி கணித்திருந்தார். இதற்கிடையே அங்குள்ள ஒரு தீவில் குறுகிய நேரத்தில் 1000+ சிறு பூகம்பம் ஏற்பட்டுள்ளதாம். இது அங்குள்ள மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், ஜப்பான் அரசு ஒரு முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளது.

வரும் காலத்தை குறித்த கணிப்புகள் எப்போதுமே பொதுமக்களிடையே முக்கியத்துவம் பெறும். அப்படித் தான் பல ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பான் காமிக் புத்தகம் ஒன்றில் ஒரு பகீர் கணிப்பைக் குறிப்பிட்டிருந்தனர். 'தி ஃபியூச்சர் ஐ சா' என்ற அந்த காமிக் புத்தகம் பல ஆண்டுகள் பழமையானது. இந்த காமிக் புக் கடந்த 2021ல் மறுபதிப்பு செய்யப்பட்டது.

ஜப்பான் எச்சரிக்

அந்தப் புத்தகத்தை எழுதிய ரியோ டாட்சுகி வரும் கால நிகழ்வுகளை அந்தப் புத்தகத்தில் துல்லியமாகக் கணித்ததாக நம்பப்படுகிறது. கடந்த 2011ல் ஜப்பானில் பேரழிவை ஏற்படுத்திய சுனாமியைக் கூட அவர் துல்லியமாகக் கணித்திருந்தார். கொரோனா பேரழிவையும் முன்கூட்டியே எச்சரித்திருந்தார். இதுபோல வரலாற்று நிகழ்வுகளை முன்கூட்டியே கணிப்பதால் இவரை ஜப்பானின் புதிய பாபா வங்கா என்றும் அழைக்கிறார்கள்

.ஜூலை 5ம் தேதி ஜப்பானில் பேரழிவு ஏற்படும் என அவர் கணித்திருந்தார். மிகப் பெரிய சுனாமி ஏற்படும் என்றும் இதனால் அங்குக் கடலோரப் பகுதிகளில் பேரழிவு ஏற்படும் என அவர் கணித்திருந்தார். இதனால் ஜப்பானுக்குச் சுற்றுலா செல்வோரின் எண்ணிக்கை கூட 60%க்கு மேல் சரிந்தது. அவர் சொன்னது போல ஜூலை 5ல் சுனாமி எதுவும் ஏற்படவில்லை. ஆனால் அங்கு நிலநடுக்கம் அதிகரித்துள்ளது. அதுவும் 1000+ நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களில் டோக்காரா தீவுகளில் 1,000க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் ஏற்பட்டிருந்தன. இதற்கிடையே அதன் முக்கிய தீவுகளின் தென்மேற்கே கடலில் நடுக்கங்கள் ஏற்படலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று சனிக்கிழமை தான் டோக்காரா தீவுகள் பகுதியில் 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதற்கு முன்பு வியாழக்கிழமை, ககோஷிமா மாகாணத்தில் உள்ள ஒரு சிறிய எரிமலை தீவான அகுசேகி தீவில் வசித்த 89 பேரும் வெளியேற்றப்பட்டனர். பெரிய பேரழிவு இல்லை என்றாலும் இதுபோன்ற சின்ன சின்ன நிகழ்வுகள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதேநேரம் கணிப்புகளுக்கு ஆதாரம் இல்லையென்றாலும், ஜப்பானில் பெரிய நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு இருக்கவே செய்வதாக ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். சுரூக விரிகுடாவிலிருந்து கியூஷு வரையிலான ஆழ்கடல் பகுதியை நான்கை (Nankai Trough) என குறிப்பிடுகிறார்கள். இதன் கீழ் இருக்கும் கடல் தட்டின் மூவ்வெண்ட் காரணமாக இப்பகுதியில் 90 முதல் 200 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிலநடுக்கம் ஏற்படுகிறது.